கொங்கு தக்காளி குருமா , tamil samayal kuruma

 

தேவையான பொருட்கள்

மசாலா அரைக்க
தேங்காய் துருவல் 1/3 கப்
பொட்டுக்கடலை 1 மேஜைக்கரண்டி
கசாகசா 1 தேக்கரண்டி
சோம்பு 1 தேக்கரண்டி
கிராம்பு 2
பட்டை 3/4 இன்ச்
முழு முந்திரி பருப்பு 15
வரமிளகாய் 5
சின்ன வெங்காயம் 6 ( அம்மிகல்லில் நசுக்கியது )

மற்றவை
நாட்டு தக்காளி 5
மரசெக்கு நல்லெண்ணெய் 1 மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை 1 கொத்து
பச்சை மிளகாய் 6
வேகவைத்த உருலைகிழங்கு 1 ( கட்டிகளே இல்லாமல் பிசைந்து கொள்ளவும் )
கடுகு 1 தேக்கரண்டி
பூண்டு பற்கள் 8 ( நசுக்கி கொள்ளவும் )
சின்ன வெங்காயம் 5 ( பொடியாக நறுக்கியது )
பெரிய வெங்காயம் 1/2 கப் ( பொடியாக நறுக்கியது )
தூத்துக்குடி உப்பு தேவையான அளவு

செய்முறை

1. பிரஷர் குக்கரில் நன்கு கழுவிய தக்காளியை ஒரு கப் தண்ணீரில் போட்டு மேலும் 4 விசில் விடவும்.

2. பிரஷர் முழுவதுமாக அடங்கியதும் வெந்த தக்காளியை எடுத்து வேகவிட்டு நன்றாக மிக்ஸியில் போட்டு அடித்து கொள்ளவும்.

3. இப்போது மிக்ஸியில் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து நன்கு மசியும் வரை அரைத்து கொள்ளவும்.

4. இப்போது இரும்பு வடச்சட்டியை அடுப்பில் வைத்து அதில் மரசெக்கு நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து வெடிக்க ஆரம்பித்த உடன் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

5. அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.

6. இப்போது பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும்.

7. அதில் மையாக அரைத்த பூண்டு விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்.

8. இச்சமயத்தில் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்துகோங்க ஒரு கொதி வந்ததும் மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதையும் சேர்த்து அதனுடன் 1 1/2 கப் தண்ணீரில் நன்றாக பிசைந்து வைத்துள்ள உருளைகிழங்கை கரைத்து ஊற்றி மற்றும் தேவையான அளவு தூத்துக்குடி கடல் உப்பையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

9. இந்த கலவை குறைந்த பட்சம் 15 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.

10. 5 நிமிடங்களுக்கு ஒரு முறை இரும்பு கரண்டியை கொண்டு கிளறவும். அடிபிடிக்காமல் பார்த்து கொள்ளவும்.

11. அதற்கு பிறகு இறக்கி ஆவிபறக்கும் இட்லி மற்றும் சுடச்சுட முறுகலான தோசை உடன் பரிமாறவும்.

Loading...
Categories: idli Vagaigal In Tamil, Iyengar Samayal

Leave a Reply


Sponsors