கொங்கு மட்டன் வறுத்த வடச்சட்டி சோறு, tami samayal

இந்த வடச்சட்டி சோத்துக்கு உச்சுகொட்டாத நாவு இருக்காது !!!

இதன் சுவைக்கு மயங்காத மக்களும் இருக்க முடியாது !!!

இதை கிராமத்தில் உள்ள மக்களை கேட்டால் அவர்கள் சொல்வது பல கதைகள் இருக்கும்.

இதை உங்கள் வீடுகளில் செய்து சமைத்து உண்டுவிட்டு உங்கள் அணுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

வெள்ளாட்டு முன்னங்கால் தொடை கறி 500 கிராம்
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
பிரிஞ்சி இலை 1
பட்டை 2 இன்ச்
கிராம்பு 3
இஞ்சி 1 இன்ச் ( பொடியாக நறுக்கியது)
பூண்டு பற்கள் 6 ( பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் 2 பொடியாக நறுக்கியது
சின்ன வெங்காயம் 1 கப் ( பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் 4 ( பொடியாக நறுக்கியது)
கறிவேப்பில்ல ஒரு கைப்பிடி
கொத்தமல்லி தூள் 1 மேஜைக்கரண்டி
வரமிளகாய் தூள் 1 தேக்கரண்டி
கரம்மசாலா தூள் 1/2 தேக்கரண்டி
சோம்பு தூள் 1/2 தேக்கரண்டி
தக்காளி 1 ( பொடியாக நறுக்கியது)
மரச்செக்கு கடலெண்ணய் 3 மேஜைக்கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு
வேகவைத்த சாதம் 2 1/2 கப்
நநாட்டு மாட்டு வெண்ணை 2 மேஜைக்கரண்டி

வறுத்து அரைக்க
தேங்காய் துருவல் 1/2 கப்
குரு மிளகு 1 தேக்கரண்டி

தாளிக்க
கடுகு 1/2 தேக்கரண்டி
தேங்காய் வில்லைகள் ( மெல்லியதாக நறுக்கியது 3 மேஜைக்கரண்டி)
கறிவேப்பில்ல 1 கைப்பிடி

செய்முறை

1. மட்டனை நன்றாக சுத்தமாக கழுவி வைத்து கொள்ள வேண்டும். அதனுடன் 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் தேவையான அளவிலான உப்புதூள் சேர்த்து அதனுடன் 1/4 கப் தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரில் வேக வைத்து கறியை மட்டும் தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

2. அதே சமயத்துல தேங்காய் துருவலை பொன்னிறமாக வறுத்து அதை நன்றாக ஆற வைத்து அதனுடன் குருமிளகு சேர்த்துகோங்க நன்றாக மையமாக நைசாக விழுதாக தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ள வேண்டும்.

3. இப்பொழுது இரும்பு வடச்சட்டியில் மரசெக்கு கடலெண்ணய் விட்டுகோங்க அதில் பிரிஞ்சி இலை , மராட்டிய மொக்கு , இலவங்கம் , பட்டை சேர்த்துகோங்க சிறிது விநாடிகள் நன்றாக வதக்க வேண்டும்.

4. இப்பொழுது அதில் இஞ்சி , பூண்டு, பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் , பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவிலான கல் உப்பை சேர்த்துகோங்க நன்றாக மிதமான தீயில் 10 – 15 நிமிடங்கள் பொன்னிறமாக வதக்க வேண்டும்.

5. இச்சமயத்துல அடுப்பை சிறுதீயில் வைத்து அதில் கொத்தமல்லி தூள், வரமிளகாய் தூள், கரம்மசாலா தூள், சோம்பு தூள் சேர்த்துகோங்க அதனுடன் சிறிது தண்ணீர்கூட சேர்த்துகோங்க நன்றாக 5 நிமிடம் எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும்.

6. இச்சமயத்துல அதில் வேகவைத்துள்ள மட்டன் துண்டுகளை சேர்த்துகோங்க அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் மொழகு மசாலா கலவையை சேர்த்துகோங்க அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்துகோங்க , அதனுடன் மட்டன் வேகவைத்த சமயத்துல எடுத்து வைக்கப்பட்ட மட்டன் சாறை ஊற்றி தேவையான அளவிலான உப்பை சேர்த்துகோங்க வடச்சட்டி மீது மூடியை மூடி 12 நிமிடங்கள் சிறுதீயிலேயயே நன்றாக கொதிக்க விட்டுகோங்க குழம்பு நன்றாக கெட்டி ஆகும் வரையில் இடை இடையே நாட்டு மாட்டு பசு வெண்ணை சேர்த்துகோங்க நன்றாக சிவக்க கிளறவும்.

7. இச்சமயத்துல மற்றுமொரு சிறு வடச்சட்டியில் மரசெக்கு தேங்காய் எண்ணெய் விட்டுகோங்க நன்றாக காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்துகோங்க நன்றாக வெடிக்க ஆரம்பித்த உடன் அதில் சிறிது சிறிதாக நறுக்கிய சின்ன வெங்காயம் , சிறிது சிறிதாக வெட்டிய தேங்காய் வில்லைகள் மற்றும் கறிவேப்பில்ல சேர்த்துகோங்க நன்றாக பொன்னிறமாக சிவக்க சிவக்க வதக்க வேண்டும்.

8. சிவக்க வறுத்த கலவையை கறி கலவையில் சேர்த்துகோங்க நன்றாக கிளறவும்.

9. இச்சமயத்துல வேகவைத்துள்ள வடித்த சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து இடை இடையே நாட்டு மாட்டு பசுவெண்ணையையும் சேர்த்துகோங்க நன்றாக கிளறி நன்றாக மசாலாவுடன் ஒன்றியவுடன்.

10. அடுப்பை சிறுதீயில் வைத்து நன்றாக ஃப்ரை பண்ண வேண்டும். அப்போது தான் மசாலாவுடன் சேர்ந்து சாதம் நன்றாக ஃப்ரை ஆகும் சமயத்துல சுவை கூடும்.

Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil

Leave a Reply


Sponsors