பாட்டி சொல்லும் பியூட்டி டிப்ஸ்

 

 

அந்த காலத்தில் இருந்த பெண்களும் சரி, ஆண்களும் சரி,  அழகாக இருந்ததிற்கு என்ன காரணம் என்று தெரியுமா.? அவர்களது உடல் மற்றும் சரும பராமரிப்புகள் தான்.அதுவும் அவர்களது சரும பராமரிப்புக்கு பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் வீட்டில் இருக்கும் சமையலறை பொருட்கள் தான். சரி வாங்க இவற்றில் பாட்டி சொல்லும் அழகு குறிப்பு என்னவென்று காண்போம்.

அழகுக்கு அழகு சேர்க்கும் பால்!!!

அழகு குறிப்பு (Beauty tips in tamil)1:

வெள்ளரிக்காயை வட்ட வடிவில் வெட்டிக்கொண்டு அந்த வெள்ளரிக்காயை கண்களில் சிறிது நேரம் வைத்து அமைதியாக அமர்ந்திருக்கவும்.

இவ்வாறு அமர்ந்திருப்பதினால் கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி, கருவளையங்கள் நீங்கும் என்று பாட்டிகள் சொல்வார்கள்.

இந்த முறையை தான் இப்போது அனைத்து அழகு நிலையங்களிலும் ஃபேஸ் மாஸ்க் போட்ட பின் கண்களில் வெள்ளரிக்காய் துண்டுகளை வைக்கின்றனர்.

அழகு குறிப்புகள் (Beauty tips in tamil) 2:

தினமும் முகத்தை 3 அல்லது 4 முறை குளிர்ந்த நீரால் கழுவினால் முகத்தில் இருக்கும், அழுக்குகள் நீங்கி, முகம் பொலிவாக இருக்கும்.

அழகு குறிப்பு (Beauty tips in tamil) 3:

ஆரம்ப காலத்தில்  அழகுக்கு என்று சிகிச்சைகள் இருக்காது. ஆகவே அப்போது பெண்கள் ஆவி பிடித்து தான், அழகைப் பராமரித்து வந்தார்கள்.

எனவே முகத்தில் உள்ள பருக்களை போக்குவதற்கு ஆவிப் பிடித்தால், பருக்கள் வராமல் தடுக்கலாம்.

அழகு குறிப்புகள் (Beauty tips in tamil) 4:

கடைகளில் விற்கும் ஃபேஸ் மாஸ்க்குகளை போடுவதற்கு பதிலாக, பழங்களை வைத்து மாஸ்க் போட்டால், அதில் உள்ள சத்துக்கள் முகத்தை பளிச்சென்று பொலிவுற வைக்கும்.

அதிலும் மாம்பழம், பப்பாளி, எலுமிச்சை, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்றவை, மாஸ்க் போடுவதற்கு மிகவும் சிறந்த பழங்கள்.

அழகு குறிப்பு (Beauty tips in tamil) 5:

தேங்காய் எண்ணெய் வெதுவெதுப்பாக சூடேற்றி, தலைக்கு தடவி,  20 நிமிடம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முடி வளர்ச்சி அதிகரிப்பதோடு, அடர்த்தியாகவும் வளரும்.

குறிப்பாக இரவில் தலைக்கு மசாஜ் செய்துவிட்டு, காலையில் குளிப்பது நல்ல பலனை தரும்.

அழகு குறிப்புகள் (Beauty tips in tamil) 6:

கூந்தலுக்கு கெமிக்கல் கலந்த கண்டிஷனர்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக தயிரைப் பயன்படுத்தினால், கூந்தல் நன்கு பட்டுப் போன்று, மென்மையாக இருக்கும்.

பொடுகு தொல்லை நீங்க உப்பு போதுமா ? TRY பண்ணுங்க

அழகு குறிப்பு (Beauty tips in tamil) 7:

சருமத்திற்கு க்ரீம்கள் மற்றும் லோசன்கள் பயன்படுத்துவதற்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை தடவினால், சருமம் மென்மையாக, ஈரப்பதத்துடன், சுருக்கமின்றி இருக்கும்.

அழகு குறிப்புகள் (Beauty tips in tamil) 8:

பாட்டிகள் சொல்வதில் தவறாமல் கடைபிடிக்க வேண்டியவைகளில் முக்கியமானவை எலுமிச்சையை தலைக்கு பயன்படுத்துவது தான்.

ஏனெனில் எலுமிச்சையின் சாற்றினை தயிருடன் சேர்த்து கலந்து, தலைக்கு மசாஜ் செய்து குளித்தால், தலையானது சுத்தமாக பொடுகின்றி இருக்கும். மேலும் கூந்தல் உதிர்தலும் தடைபடும்.

அழகு குறிப்பு (Beauty tips in tamil) 9:

உதடுகள் மென்மையாகவும், வறட்சியின்றியும் இருப்பதற்கு லிப்-பாம்களை பயன்படுத்தாமல், சிறிது நெய்யை தடவி வந்தால், உதடுகளில் வெடிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

அழகு குறிப்புகள் (Beauty tips in tamil) 10:

கைகள் மற்றும் கால்களில் வளரும் முடியை எடுப்பதற்கு, வாக்ஸிங் செய்வோம்.

அவ்வாறு வலியை உண்டாக்கும் வாக்ஸிங்கை செய்வதற்கு பதிலாக, தினமும் காலையில் எழுந்ததும், கைகள் மற்றும் கால்களுக்கு கடுகு எண்ணெய் கொண்டு, மசாஜ் செய்து பின் குளிக்க வேண்டும்.

இதனை தினமும் தொடர்ந்து  செய்து வந்தால், கைகள் மென்மையாக, முடியின்றி இருக்கும்.

இதனால் தான் நமது பாட்டிகளின் கைகள் மற்றும் கால்களில் முடி இல்லாமல் இன்றும் இளமை மாறாத தோற்றத்தில் காணப்படுகின்றனர்.

ஆரஞ்சு பழத்தோ
Loading...
Categories: Biryani Recipes Tamil

Leave a Reply


Sponsors