பாயாசம்,paayasam tamil samayal

 

தேவையான பொருட்கள்
டபுள் டியர் சீரகசம்பா அரிசி 1/2 கப்
நாட்டு மாட்டு பால் 1 1/2 லிட்டர் ( 6 கப் )
நாட்டு மாட்டு பால்கோவா 250 கிராம் ( சர்க்கரை போடாதது )
சர்க்கரை 3/4 கப்
நாட்டு மாட்டு பசு வெண்ணை 1 மேஜைக்கரண்டி
ஏலக்காய் தூள் ஒரு சிட்டிகை
முழு முந்திரி பருப்பு 15 ( நெய்யில் பொன்னிறமாக வறுத்தது )

செய்முறை

1. சீரகசம்பா அரிசியை எடுத்து நன்றாக கழுவி சுத்தம் செய்த பிறகு எடுத்து தனியாக வைக்கவும்.

2. இப்போது பிரஷர் குக்கரில் நன்றாக கழுவிய சீரகசம்பா அரிசியை சேர்த்து அதில் 3/4 லிட்டர் பால் ஊற்றி விடவும்.

3. மேலும் அதில் சர்கரையை சேர்த்து அதை கரண்டி மூலம் ஒரு கலக்கு கலக்கி பிரஷர் குக்கரின் மூடியை மூடி ஆவி வெளியேற ஆரம்பித்த உடன் அதில் வெயிட்டை பொருத்திய உடன் அடுப்பை சிம்மில் வைக்கவும்.

4. ஒரு விசில் வந்த உடன் அடுப்பை அணைத்து விட்டு பிரஷர் அடங்கும் வரை காத்து இருக்க வேண்டும்.

5. பிரஷர் முழுவதுமாக அடங்கியதும் அதில் பிரஷர் குக்கரின் மூடியை திறந்து அதில் ஏலக்காய் தூள சேர்த்து விடவும்.

6. அதில் மேலும் மீதமுள்ள பாலை சேர்த்து அதனுடன் நாட்டு மாட்டு சர்க்கரை இல்லாத பால்கோவாவை சேர்த்து 20 நிமிடங்கள் சிம்மில் வைத்து கிளறி கொண்டே இருக்க வேண்டும்.

7. இப்போது பாயாசம் கொஞ்சம் திக்காக மாறி கொஞ்சம் கொஞ்சமாக பால் நிறம் மாறி அதன் நிறம் வெளீர் பிங்க் நிறத்தில் மாறி வரும் சமயத்தில் அடுப்பை அணைத்து விடவும்.

8. அதில் ஒரு மேஜைக்கரண்டி நாட்டு மாட்டு வெண்ணையை சேர்த்து ஒரு கிளறு கிளறி அதில் மேலும் பொன்னிறமாக வறுத்து வைத்துள்ள முழு முந்திரி பருப்பை சேர்த்து கிளறி விடவும்.

9. இப்போது பரிமாறவும்.

Loading...
Categories: Chettinad Recipes Tamil, Diwali Recipes in tamil, Healthy Recipes In Tamil

Leave a Reply


Sponsors