மதுரை மட்டன் சுக்கா,tamil samayal ,mutton sukka tamil,tamil mutton recipes

 

 

இந்த சுக்கா முறை பெரும்பாலும் உணவகங்களில் பின்பற்றும் முறை ஆகும்.

இந்த முறையை தான் மதுரை பேமஸ் முனியாண்டி விலாஸ் உணவகங்களில் சமைக்கும் முறையாகும்.

இந்த முறையும் சாப்பிட மிகவும் பிரமாதமாக இருக்கும். இது நாவிற்கு நன்றாக உரைப்பாக இருக்கும்.

இது அனைத்து உணவு வகைகளுடன் சாப்பிட சும்மா டக்கராக இருக்கும்.

நன்றாக கிளறி எடுத்து பரிமாறினால் தான் சுவை இரட்டிபுடன் இருக்கும்.

தேவையான பொருட்கள்

மட்டன் 500 கிராம் ( ஒரு இன்ச் துண்டுகளாக)
சின்ன வெங்காயம் 200 கிராம் ( அம்மியில் நசுக்கியது )
பச்சை மிளகாய் 4 ( அம்மியில் நசுக்கியது )
தக்காளி 1 சிறியது ( மிக்ஸியில் அரைத்தது )
வரமிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
கொத்தமல்லி தூள் 1/2 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
கரம்மசாலா தூள் 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து
இஞ்சி-பூண்டு விழுது 2 மேஜைக்கரண்டி
சோம்பு தூள் 1/2 தேக்கரண்டி
மரசெக்கு கடலெண்ணய் 4 மேஜைக்கரண்டி
கொத்தமல்லி இலைகள் ஒரு கைப்பிடி
வேதாரண்யம் கடல் உப்பு தேவையான அளவு

செய்முறை
1. முதலில் மட்டனை நன்றாக சுத்தமாக கழுவி கொள்ள வேண்டும்.

2. அதற்கு பிறகு மண்சட்டியில் கழுவிய மட்டனை சேர்த்து அதில் 4 கப் தண்ணீர் சேர்த்து அதனுடன் தேவையான உப்பு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

3. மட்டன் நன்றாக மெதுவாக வெந்ததும் அதில் கறியை தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

4. இப்போது மண்வடச்சட்டியை அடுப்பில் வைத்து அதில் மரசெக்கு கடலெண்ணய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் அதில் அம்மியில் நசுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும்.

5. அதில் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

6. பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

7. பின்னர் அதில் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்.

8. அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து அதனுடன் அனைத்து பொடிவகைகளையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தேவையெனில் மட்டன் வேகும் சமயத்தில் எடுத்து வைத்துள்ள மட்டன் சாறை சேர்த்து நன்கு வதக்கவும்.

9. அதில் வேகவைத்து வைத்துள்ள மட்டனை சேர்த்து நன்கு கிளறவும். அதில் தேவையான அளவு உப்பை சேர்த்து நன்கு வதக்கவும். மட்டனுடன் மசாலா நன்றாக ஒன்றும் வரை கிளறவும்.

10. பிறகு அதில் மேலும் இரண்டு குழம்பு கரண்டி அளவு மட்டன் சாறை ஊற்றி நன்றாக சூட்டிலேயே கிளறவும்.மசாலாவுடன் கறி நன்றாக சேர்த்து வெந்து சுவை அதிகரிக்க உதவிடும்.

11. நன்றாக மசாலா உடன் திரண்டு வரும் சமயத்தில் பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.

Loading...
Categories: Chef Dhamu Samyal In Tamil, Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips

Leave a Reply


Sponsors