மல்லிகை பூ இட்லி ,mallikaipu edli

மல்லிகை பூ இட்லி

தேவையான பொருட்கள்
இட்லி அரிசி – 3 கப்
உளுத்தம் பருப்பு – 1 கப்
அவல் – 1 கப்
தயிர் – 3/4 cup
பழைய சாதம் 3/4 கப்
சோடா உப்பு 1 தேக்கரண்டி

செய்முறை

1. இட்லி அரிசியை தனியாகவும், உ.பருப்பு+அவல் சேர்த்தும் 3 முதல் 5 மணி நேரம் ஊற வைத்தால் போதுமானது.

2. முதலில் உ.பருப்பு மற்றும் அவல் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். அதில் பழைய சாதத்தையும் போட்டு நன்றாக நைசாக அரைத்து கொள்ளவும்.

3. பிறகு அரிசியை இரு பாகமாக பிரித்து அரைக்கவும். அரிசியை நைசாக இல்லாமல், சற்று பொரபொரவென்று அரைக்கவும். இறுதியாக தேவையான அளவு உப்பு , சோடா உப்பு மற்றும் தயிர் சேர்த்து கை விட்டு கலக்கி வைக்கவும். 9 முதல் 12 மணி நேரத்திற்க்குள் (depending on your room temperature) மாவு நன்கு புளித்துவிடும்.

குறிப்பு :

1. சீக்கிரம் புளிக்க வேண்டுமென்று சோடா உப்பு பயன்படுத்த தேவையில்லை. தயிர் சேர்ப்பதால்(இயற்கையான பாக்டீரியாக்களால்) சீக்கிரம் புளிப்பதோடு, இட்லி மிருதுவாகவும் இருக்கும்.

2. இட்லி மாவு கரைக்கும் போது, மாவை கெட்டியாக கரைக்காமல், சற்று தளர்வாக கரைத்தால், மாவு வெந்து வரும்போது, இட்லி பூ போல வரும்.

Loading...
Categories: idli Vagaigal In Tamil

Leave a Reply


Sponsors