சர்க்கரைநோய் வருமுன் காக்கும் இயற்கை உணவுகள், tamil helth tips

சர்க்கரைநோய் வந்த பின்னும் அல்லது வருமுன் காப்பதற்கு சித்தர்கள் எளிமையாக இயற்கையான மூலிகைகளை பற்றி முன்பே நமக்கு குறிப்பிட்டுள்ளார்கள்.

வெந்தயம் : வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் அதை நன்றாக மசித்து தினமும் அந்த நீரை குடித்து வந்தால் நீரிழிவு கட்டுப்படும். மேலும் வெந்தயக்கீரையை வாரம் 2 முறை உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரைநோய் வராமல் தடுக்கலாம்.

நாவல் : நாவல் பழக்கொட்டைகளை காய வைத்து நன்கு இடித்து பொடிசெய்து தினம் 1 தேக்கரண்டி அளவு காலை உணவிற்கு முன் சாப்பிட்டு வந்தால் சர்க்கரைநோய் கட்டுப்படும், மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்

மாந்தளிர் : மாமரத்தினுடைய தளிர் இலை களை எடுத்து உலர்த்தி இடித்து பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும். இதில் 1 தேக் கரண்டி பொடி எடுத்து கசாயமிட்டு தினமும் காலையில் உணவிற்கு முன் அருந்தி வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.

பாதாம்பருப்பு : தினம் 5 பாதாம் பருப்பை நீரில் ஊறவைத்து தோல் நீக்கி உண்டுவர ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சமநிலையில் வைத்து கொள்ளும்.
வெண்டைக்காய்: வெண்டைக்காயை தினம் உணவில் சேர்த்து கொள்வது நல்லது. சர்க்கரை சத்து அதி களவில் உள்ளவர்கள் 2 வெண் டைக்காயை நீளவாக்கில் அரிந்து அதை 1 டம்ளர் நீரில் இரவு போட்-டு வைத்து மறுநாள் காலையில் குடித்து வருவது நல்லது.

பாகற்காய் : தினம் 60 மில்லி பாகற்காய் சாறு அருந்துவதால் ரத்தத்தில் அதிகரித்த சர்க் கரையின் அளவு குறையும். உணவில் அடிக்கடி பாகற்காய் சேர்த்து வருவது நல்லது.

நெல்லிக்காய் : நெல்லிவற்றலை பொடித்து வைத்து கொண்டு 1/2 தேக்கரண்டி அளவு தினம் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ரத்தத் தில் சர்க்கரையின் அளவை சமநிலையில் வைக்க உதவும்.

கொய்யா : சர்க்கரையின் அளவு அதிகம் உள்ள வர்கள் தினம் 2 கொய்யா சாப்பிட்டு வருவது நல்லது. இது நம் உடலில் சர்க்கரையின் அளவு சமநிலையில் வைக்க உதவுகிறது. மேலும் 5 கொய்யா இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து 60 மில்லி காலை, மாலை இரு வேளை குடித்து வர சர்க்கரையின் அளவு குறையும்.

வெங்காயம்: தினமும் 50 கிராம் பச்சை வெங்காயம் மதிய உணவிற்கு பின் சாப்பிட்டு வர நம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தும். இதை தினமும் உணவில் சேர்த்து வருவதால் நம் உடலில் இன்சுலின் ஹார்மோன் சமநிலையில் இருக்கும்.

ஆவாரை: ஆவாரை சமூலம் காயவைத்து பொடித்து வைத்து கொண்டு தினம் 2 கிராம் அளவு காலை மாலை சாப்பிட்டு வர சர்க்கரையின் அளவு குறையும்.

கறிவேப்பிலை : கறிவேப்பிலையை காய வைத்து பொடித்து வைத்து கொண்டு 1 தேக்கரண்டி அளவு காலையில் உணவிற்கு முன் சாப்பிட்டுவர இன்சுலின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும், இதனால் பரம்பரையாக ஏற்படும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.

முருங்கை இலை: முருங்கை இலையை கீரையாக பொரியல் செய்து உணவில் உண்டுவர இதில் அஸ்கார்பிக் ஆசிட் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும். இதனால் சர்க்கரையின் அளவு ரத்தத்தில் குறைகிறது.

நித்தியகல்யாணி பூ: 10 நித்தியகல்யாணி பூ எடுத்து கசாயமிட்டு தினம் 60 மில்லி குடித்து வர சர்க்கரையின் அளவு ரத்தத்தில் சமநிலையில் இருக்கும்.

மஞ்சள் தூள்: தினமும் இரவு 1 டம்ளர் பாலில் 1/2 தேக்கரண்டி மஞ்கள் தூள் சேர்த்து சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சர்க்கரையின் அளவை குறைக்கும்.

பசலைக்கீரை: பசலைக்கீரை வாரம் 3 நாள் தினமும் உணவில் சேர்த்து வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சமஅளவில் வைக்க உதவுகிறது.

Loading...
Categories: News

Leave a Reply


Sponsors