BIGG BOSS-க்கு தடை? பதில் அளிக்க சொன்ன உயர்நீதிமன்றம்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்க பிக்பாஸ் 3வது சீசன் நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுகிழமை தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக உள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் கவர்ச்சியான உடை அணிந்து வருகின்றனர்.

இரட்டை அர்த்தமுடைய வசனங்கள் பேசப்படுகிறது. இது இளைஞர்களையும், பார்வையாளர்களையும் பாதிக்கும் வகையில் உள்ளது. எனவே இந்தியன் பிராட்காஸ்ட் பவுண்டேசனின் தணிக்கை சான்று பெறாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பக் கூடாது என்று வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று நீதிபதி மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், நிகழ்ச்சி தொடங்கும் முன்னர் அந்த நிகழ்ச்சி ஆபாசமாக இருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது என தெரிவித்தனர்.

அதன் பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு தொடர்பாக இந்தியன் பிராட்காஸ்ட் பவுண்டேசன் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

Loading...
Categories: News

Leave a Reply


Sponsors