மசாலா டீ தயாரிப்பது எப்படி!, masala tea thayarippathu eppadi in tamil

தேவையான பொருட்கள்

  • பால் – 1 கப்
  • தண்ணீர் – 1 கப்
  • தேயிலை தூள் – 3 தேக்கரண்டி
  • ஏலக்காய் – 2
  • பட்டை – 1 சிறிய துண்டு
  • இஞ்சி – சிறிய துண்டு
  • சோம்பு – 1/4 தேக்கரண்டி
  • சர்க்கரை – சுவைக்கேற்ப

செய்முறை

  • ஏலக்காய், இஞ்சி, பட்டை, சோம்பை ஒன்றும் பாதியாக தட்டி கொள்ளவும்.
  • பாத்திரத்தில் 1 கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் தட்டி வைத்துள்ள பொடியை போட்டு அதனுடன் தேயிலை தூளை போட்டு நன்றாக கொதிக்க விடவும்.
  • நன்றாக கொதித்து மசாலா நன்றாக தண்ணீரில் இறங்கியவுடன் பாலை சேர்த்து, சிறு தீயில் 10 நிமிடம் நன்கு கொதித்த பின், இறக்கி வடிகட்டவும்.
  • சர்க்கரை கலந்து பருகவும்.
  • புத்துணர்ச்சி தரும் மசாலா டீ தயார்.
Loading...
Categories: arokiya unavu in tamil, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors