முட்டை வட்லாப்பம், Egg vadlappam seimurai kurippu in tamil language

தேவையான பொருட்கள் :

  • முட்டை – 10
  • கருப்பட்டி – 2 டம்ளர்
  • தேங்காய் – 1
  • ஏலக்காய் – 3
  • முந்திரி – 6
  • நெய் – 1/2 டீஸ்பூன்
  • அலங்கரிக்க.
  • பாதாம்,
  • முந்திரி – தேவைக்கேற்ப.

செய்முறை :

*தேங்காயை அதிகம் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து, கெட்டியாகப் பால் எடுக்கவும். முட்டையை நன்கு நுரை பொங்க அடிக்கவும்.

*கருப்பட்டியைப் பொடித்து வைக்கவும். கருப்பட்டி, தேங்காய்ப் பால், முட்டை மூன்றையும் நன்கு கலக்கவும்.

*முந்திரியைப் பொடியாக அரிந்து நெய்யில் வறுத்துச் சேர்க்கவும்.

*ஏலக்காயை பிரித்து, உள்ளே உள்ள விதையை எடுத்து இலேசாக வறுத்துப் பொடித்துச் சேர்த்து, நன்கு கலக்கி, குக்கரின் அடியில் வைக்கும் தட்டை வைத்து அதன் மேல் ஒரு டிபன் பொக்ஸில் கலவையை ஊற்றி மூடிவிட்டு குக்கரை மூடி 5 விசில் விட்டு 10 நிமிடங்கள் சிம்மில் வைத்து அவிக்கவும்.

*கருப்பட்டியை விரும்பாதவர்கள் அதன் அளவை குறைத்துக் கொள்ளலாம்.

Loading...
Categories: இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors