மோர் ஓட்ஸ் கொழுக்கட்டை, moor kulukaddai recipe in tamil

என்னென்ன தேவை?

ஓட்ஸ் – 2 டேபிள்ஸ்பூன்,
அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன்,
மோர் – 4 டேபிள்ஸ்பூன்,
கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 4 இலை,
இடித்த மிளகு,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

ஓட்ஸ், அரிசி மாவு, மோர், உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் ஊறவிடவும். மிளகு சேர்த்து தேவையென்றால் தண்ணீரும் சேர்த்து தோசைமாவு பதத்தில் ஊறவிடவும்.

எண்ணெயை சூடாக்கி கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வெடிக்க விடவும்.

அதில் ஊற வைத்த ஓட்ஸ் கலவையை சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடங்கள் கட்டி ஆகும் வரை கிளறவும்.

அடுப்பை அணைத்து விட்டு இறக்கி ஈர கைகளால் கொழுக்கட்டை பிடித்து ஆவியில் 3-4 நிமிடங்கள் வேக வைத்து சூடாக சட்னியுடன் பரிமாறலாம்.

Loading...
Categories: Samayal Tips Tamil, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors