வினிகரின் மாறுபட்ட உபயோக முறைகள் உள்ளதென்று உங்களுக்கு தெரியுமா?

வினிகர் சமையலில் , ஊறுகா சேர்ப்பார்கள் என கேள்வி பட்டிருப்போம். ஆனால், வினிகரின் மாறுபட்ட உபயோக முறைகள் உள்ளதென்று உங்களுக்கு தெரியுமா? பார்போம் வாருங்கள்.

-ஒரு டப் மிதமான சூட்டில் வெந்நீர் ஊற்றி, ஒரு மூடி வினிகர் மற்றும் ஒரு ஸ்பூன் லிஸ்டெரின் சேர்த்துக்கொள்ளுங்கள். பின் அதில் கால் பாதங்களை விட்டு, 10நிமிடம் ஊரவிடுங்கள். பின் பாருங்கள் பாதங்களின் மிருதுவான தோற்றத்தை. பூஞ்சை தொற்றை நீக்கும்.

 

-தலைக் குளித்தவுடன் கூந்தலுக்கு கடைசி அலசலுக்கு வினிகர் கலந்த நீரை உபயோகித்தால் கூந்தல் மென்மையாக , பட்டுப்போல் இருக்கும்.

-அலங்கார ஜாடியில் பூக்கள் சீக்கிரம் வாடாமல் இருக்க ஒரு ஸ்பூன் வினிகரை ஜாடியில் உள்ள தண்ணீரில் ஊற்றி வைக்கலாம்.

-பித்தளை, செம்பு போன்ற உலோக பொருள்களை சுத்தம் செய்வதற்கு முன், நீரில் வினிகர் கலந்து அதில் ஊரவிட்டால் சுலபமாக சுத்தம் செய்து விடலாம். மேலும், இரும்பில் துருவைக்கூடக் கரைக்கும் சக்தி வினிகருக்கு உண்டு.

-முழு முட்டை நீரில் வேக வைக்கும்போது, உடையாமல் இருக்க நீரில் ஒரு ஸ்பூன் வினிகர் சேர்த்துக்கொள்ளலாம். முட்டை ஓடு உடைந்தாலும் உள்ளிருப்பது வெளியில் வராது.

-சிக்கனில் வினிகர் தெளித்து பிரட்டி வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும். அல்லது பிரியாணிக்கு சிக்கன் வேக வைக்க வினிகர் சேர்த்துக்கொண்டால், மிருதுவாக வெந்துவிடும். மாமிச வாடையும் அடிக்காது.

-சமையலில் காரத்தை கட்டுபடுத்த வினிகரை ஒரு ஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம்.

-சமயல் பாத்திரம் அடி கருகிவிட்டால் வினிகர் ஊற்றி ஊரவிட்டு கழுவுங்கள். பாத்திரம் புதிது போன்று ஆகும்.

-ஆடைகளில் கறைப் பட்டால், வினிகர் ஊற்றி ஐந்து நிமிடம் கழித்து துவைத்தால் கரை நீங்கும்.

-புதிய பாத்திரங்களில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கரை வினிகர் ஊற்றி இரண்டு நிமிடம் ஊரவிட்டால், ஸ்டிக்கர் பசையில்லாமல் பாத்திரத்தை விட்டு பிரிந்து வரும்

Loading...
Categories: Healthy Recipes In Tamil

Leave a Reply


Sponsors