பெண்கள் கணவரிடம் மறைக்கும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா?
காதல் எவ்வளவு இயற்கையானதோ அதே அளவிற்கு ரகசியங்களும் இயற்கையானதுதான். அனைவருக்குள்ளும் அவர்களைப் பற்றிய சில ரகசியங்கள் இருக்கும். அவை ரகசியமாய் இருக்கும் வரைதான் அவர்களின் வாழ்க்கையில் நிம்மதி இருக்கும். எவ்வளவு நெருக்கமானவர்களாக இருந்தாலும் சரி உங்களின் சில ரகசியங்களை உங்களிடமே வைத்துக்கொள்வதுதான் உங்களுக்கு நல்லது. இது ஆண்கள், பெண்கள் இருவருக்கும் பொருந்தும்.
பொதுவாக பெண்களை ரகசியங்களை பாதுகாக்க தெரியாதவர்கள் என்று கூறுவார்கள். ஆனால் அது மற்றவர்களின் ரகசியங்களைத்தானே தவிர அவர்களைப் பற்றிய ரகசியங்களை அல்ல. பெண்களை புரியாத புதிர் என்று கூறுவதற்கு இதுவும் காரணம். உங்களின் காதலி அல்லது மனைவி உங்களிடம் மிகவும் வெளிப்படையாக இருக்கிறார்கள், உங்கள் இருவருக்கும் இடையில் எந்த ரகசியமும் இல்லை என்று நீங்கள் நினைத்தால் அது முட்டாள்த்தனமாகும். அனைத்து பெண்களுக்குள்ளும் நிச்சயம் சில ரகசியங்கள் இருக்கும். இதற்கு விதிவிலக்கான பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.பெண்கள் ஆண்களிடம் மறைக்கும் சில பொதுவான ரகசியங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
ரகசியம் 1
பெண்கள் தங்களின் முன்னால் காதலர்களை பற்றிக் கூறும்போது எப்பொழுதும் மேலோட்டமாகத்தான் கூறுவார்கள். ஏனெனில் இது அவர்களின் தற்போதைய காதல் அல்ல திருமண வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர்கள் அறிவார்கள். பெரும்பாலும் தங்களுக்கு ஒரே ஒரு முன்னால் காதல்தான் இருந்தது என்று கூறுவார்கள். இது உண்மையாகவும் இருக்கலாம், பொய்யாகவும் இருக்கலாம், உண்மை அவர்களுக்கு மட்டுமே தெரியும்.
ரகசியம் 2
பொதுவாக பெண்களும் ஆண்கள் அளவிற்கு பாலியல் உறவில் ஆர்வத்துடன் இருப்பார்கள். அவர்களுக்கென சில எதிர்பார்ப்புகளும் இருக்கும். ஆனால் அதனை அவர்கள் எப்பொழுதும் வெளிப்படையாக கூற மாட்டார்கள். ஒருவேளை தங்கள் கணவர் பாலியல் உறவில் திருப்திப்படுத்தவில்லை என்றாலும் அதனை கூறமாட்டார்கள், தங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்வார்கள்.
ரகசியம் 3
பொதுவாக பெண்களும் ஆபாசப்படங்கள் பார்க்கக் கூடியவர்கள்தான். ஆனால் ஆண்கள் அளவிற்கு பார்க்கமாட்டார்கள். இதனை எப்போதும் ரகசியமாகத்தான் வைத்திருப்பார்கள், இது தன்னுடைய அடையாளத்தை தவறாக சித்தரிக்கும் என்று அவர்கள் நினைக்கலாம், ஆனால் அது அவர்களின் தனிப்பட்ட உரிமை அல்லது விருப்பம் என்பதை அவர்கள் உணர்வதில்லை, அதை மறைக்க வேண்டிய அவசியமும் அவர்களுக்கு இல்லை.
ரகசியம் 4
உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பற்றியும், உங்களின் நண்பர்களைப் பற்றியும் உண்மையில் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எப்போதும் வெளியே கூறமாட்டார்கள். இது தங்கள் இல்வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தலாம் என்று பெண்கள் அஞ்சுகிறார்கள்.
ரகசியம் 5
பெண்கள் தங்களின் குடும்பத்தினர் தங்கள் கணவரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை ஒருபோதும் கணவரிடம் வெளியே கூறமாட்டார்கள். ஒருவேளை அவர்கள் நல்ல விதமாக நினைத்தால் அதனை உடனடியாக கூறிவிடுவார்கள். ஆனால் ஒருவேளை அதற்கு எதிர்மறையாக நினைத்தால் அதனை ஒருபோதும் வெளிப்படுத்தமாட்டார்கள்.
ரகசியம் 6
பெண்கள் தங்களின் கணவர் தங்களை ரசிப்பதையும், தங்கள் மீது பொறாமைப்படுவதையும் எப்பொழுதும் ரசிப்பார்கள். அதனை அவர்கள் வெளியே காட்டிக்கொள்ளாவிட்டாலும் கணவர் பொறாமையில் கொஞ்சம் அவதிப்படுவதை ரகசியமாக ரசிக்க செய்வார்கள்.
ரகசியம் 7
கணவர் அணியும் உடையோ அல்லது அவர்களின் ஹேர்கட்டோ பிடிக்கவில்லை என்றாலோ அல்லது அது அவர்களுக்கு பொருந்தாமல் போனாலோ அதனை அவரிடம் சொல்ல மாட்டார்கள். அவர்களின் கண்களுக்கு கணவர் அழகாகத்தான் தெரிவார்கள்.
ரகசியம் 8
தங்களுக்கு இருக்கும் சில தீய பழக்கங்கள் அல்லது மிகவும் குழந்தைத்தனமான பழக்கங்களை பெண்கள் எப்பொழுதும் ரகசியமாகத்தான் வைத்திருப்பார்கள். இதனால் தன் மீது தவறான கண்ணோட்டமோ அல்லது கணவரின் கேலிக்கு ஆளாக நேரிடுமோ என்பதால் பெண்கள் இதனை ரகசியமாக வைத்துக்கொள்கின்றனர்.
ரகசியம் 9
பொதுவாகவே பெண்களுக்கு ஷாப்பிங் செய்வது மிகவும் பிடித்தமான ஒன்றாகும். பெண்கள் தாங்கள் வாங்கும் பல பொருட்களை கணவரிடம் இருந்து மறைத்து வைத்திருப்பார்கள்.
ரகசியம் 10
பிற ஆண்களை ரசிப்பது பற்றியோ அல்லது பிற ஆண்களிடம் ரசிக்கும் விஷயங்கள் பற்றியோ பெண்கள் ஒருபோதும் தங்கள் கணவரிடம் கூறுவதில்லை என்று ஆய்வுகள் கூறுகிறது.
ரகசியம் 11
பெண்கள் தங்கள் கணவரின் பொருட்களை எப்போதும் சோதனை செய்து பார்ப்பார்கள். அவரின் செல்போன், அலமாரி, பேக் என அனைத்தையும் அவ்வப்போது சோதனை செய்வார்கள். ஏதேனும் தவறாக கிடைத்தால் மட்டுமே அதனைக் கொண்டு சண்டையை தொடங்குவார்கள், இல்லையெனில் அவர்கள் சோதனை செய்தது இறுதிவரை ரகசியமாகவேத்தான் இருக்கும்