சளியை உடனே வெளியேற்ற இரண்டு வாழைப்பழத்துடன் இதை பிசைந்து சாப்பிடுங்க..! maruththuva kurippukal in tamil

குளிர் காலத்தில் நம்ம பாடாய்ப்படுத்தும் பிரச்னைகளில் முதன்மை வகிப்பது சளியும், இருமலும். இதை எதிர்க் கொள்வதே பெரும் சிரமமாக இருக்கும். பொதுவாக ஓரிரு நாட்கள் வதைக்கும் இந்த பிரச்சனை குளிர் காலத்தில் ஓரிரு வாரங்கள் கூட தொடரும். இது பெரிய உடல்நல கோளாறு இல்லை எனிலும் கூட, குளிர் காலத்தில் சாதாரண வேலைகளை கூட செய்ய விடாமல் செய்யும். குளிர் காலத்தில் பெரும் சிக்கலாக இருக்கும் இந்த சளி, இருமல், தொண்டை கரகரப்பு, வயிறு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் ஒரு இயற்கை மருந்து பற்றி இங்கு காணலாம்…

தேவையான பொருட்கள்!

  • 400 மில்லி வெந்நீர்
  • கருப்பு புள்ளி உள்ள பழுத்த வாழைப்பழம் இரண்டு.
  • இரண்டு டேபிள்ஸ்பூன் தேன்.

செய்முறை
ஸ்டெப் 1
கரும்புள்ளி விழுந்த பழுத்த வாழைப்பழத்தை தோல் நீக்கி, மசிக்க வேண்டும். மசிக்கும் போது மரத்தாலான கரண்டியை பயன்படுத்துங்கள். இரும்பு வகையிலான கரண்டியை பயன்படுத்தும் போது பழம் சீக்கிரமாக கருமையாகிவிடும்.

ஸ்டெப் 2
மசித்த வாழைப்பழத்தை ஒரு மண் பானையில் போடு வையிங்கள். அதில் வெந்நீரை சேர்க்கவும். இதை 30 நிமிடங்கள் விட்டுவிடவும்.

ஸ்டெப் 3
வெந்நீரில் கலந்த மசித்த வாழைப்பழம் குளுமை அடைந்தவுடன், தேன் சேர்க்கவும். பிறகு நன்கு கலக்கவும். தேனை முன்கூட்டி சேர்த்துவிட வேண்டாம். மசித்த வாழைப்பழம் வெந்நீர் சூடாக இருக்கும் போது தேன் கலந்தால், தேனின் நற்குணங்கள் இழந்துவிடும்.

உட்கொள்ளும் முறை
ஸ்டேப் 1
நூறு மில்லி அளவில் ஒரு நாளுக்கு நான்கு முறை உட்கொள்ள வேண்டும். (ஒரு நாளுக்கு நானூறு மில்லி)

ஸ்டேப் 2
ஒரு நாளுக்கு நானூறு மில்லி போதுமானது. தினமும் புதியதாக ஃப்ரெஷாக தயாரித்து உட்கொள்ள வேண்டும்.

ஸ்டேப் 3
இதன் பலன் ஐந்து நாட்களில் தெரியவரும். இது முழுக்க முழுக்க இயற்கை மருந்து என்பதால் எந்தவிதமான பக்கவிளைவுகளும் உண்டாகாது. மேலும் சில இதர வழிகளை பார்ப்போம்….

வெற்றிலை ஒன்று. இஞ்சி சிறிய துண்டு. தேன் தேவையான அளவு. இவற்றை வைத்து எப்படி மருந்து செய்வதென பார்க்கலாம். முதலில் வெற்றிலையின் காம்பை நீக்கிவிடுங்கள். வெற்றிலையை துண்டு துண்டாக நறுக்கி அதனுடன் இஞ்சியை சேருங்கள். நன்றாக கொதித்த தண்ணீர் ஒரு டீஸ்பூன் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து அதில் வரும் ஜூஸை சிறிய பாத்திரத்தில் வடித்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஜூஸ் சிறிது காரமாக இருக்கும் அதனால் சிறிதளவு தேன் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இப்போது மருந்து தயார். இந்த ஜூஸை காலை மற்றும் மாலை இரண்டு வேலையும் குடித்து வர இரண்டே நாட்களில் நுரையீரல் சளி ஆஸ்துமா போன்றவை நீங்கிவிடும்.

இது மலத்துடன் வெளியேறுவதால் எந்த பக்க விளைவுகளும் இல்லை. இந்த ஜூஸ் 10 வயதிற்கு மேட்பட்டவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.

மார்புச் சளி :
இரண்டு நாட்கள் கவனிக்கவில்லையென்றால் கூட நெஞ்சில் சளி கட்டிக் கொள்ளும் அளவிற்கு சளித்தொல்லைபெருகிடும். இதனைத் தடுக்க ஓமவல்லி இலையை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அப்படி எடுக்கப்பட்ட இரண்டு மில்லி சாறுடன் எட்டு மில்லி தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் மார்புச் சளியை போக்க உதவிடும்.

காய்ச்சல் :
சிரப் என்று மருத்துகள் பின்னால் ஓடுவதற்கு பதிலாக வீட்டிலேயே சில கை மருத்துவத்தத்தை செய்வது உங்களுக்கு மிகச் சிறந்த பயனைத் தரும்.

குழந்தைகளுக்கு இந்த ஓமவல்லி இலைகளை கசக்கி அதன் சாறை குடிக்கச் செய்திடலாம். பெரியவர்கள் இலையை அப்படியே சாப்பிடலாம். தினமும் நான்கைந்து இலைகளை சாப்பிடுவதால் உடனடி பலன் கிடைத்திடும்.

அம்மைத் தழும்புகள் :
அம்மை பாதிப்பு ஏற்பட்டு அதன் தழும்புகள் இருந்தால் அதனைப் போக்க ஓமவல்லி இலையை பயன்படுத்தலாம். ஓமவல்லி இலையை அரைத்து அதனை பற்றுப் போல தழும்புகள் உள்ள இடத்தில் போட வேண்டும். பத்து நிமிடங்கள் போட்டு காய்ந்த பிறகு கழுவிடலாம்.

அம்மைத் தழும்பு மட்டுமல்லாது கட்டிகள் மற்றும் பருக்களுக்கும் ஓமவல்லி இலைகள் சிறந்த நிவாரணத்தை கொடுத்திடும்

தலைவலி :
ஒற்றைத் தலைவலி மற்றும் அதீத ஸ்ட்ரஸினால் ஏற்படக்கூடிய தலைவலியை போக்குவதில் கூட ஓமவல்லி முக்கிய பங்காற்றுகிறது. முதலில் ஓமவல்லியை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள் பின் இதனுடன் நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன் மற்றும் சர்க்கரை சிறிதளவு சேர்த்து நன்றாக குழைத்து தலைக்கு பற்றுப் போடு அது சூட்டைத் தணித்து தலைவலியைப் போக்கிடும்.

அஜீரணம் :
அஜீரணத்தால் ஏற்படக்கூடிய வயிற்று வலி மற்றும் வாந்தியை போக்க வல்லது. உணவு ஒவ்வாமை ஏற்பட்டிருந்தால் கூட அதனை ஓமவல்லி தீர்க்கும். இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது அதோடு சிறுநீரகப் பிரச்சனை, சிறுநீரகத் தொற்று நீர் கடுப்பு ஆகியவற்றை போக்க பெரிதும் உதவுகிறது.

குடிநீர் :
சளித்தொல்லை மற்றும் மூக்கடைப்பு இருந்தால் உங்களது அன்றாட வேலையே பெரிதும் பாதிக்கப்படும்.அதனை குறைக்க நீங்கள் குடிக்கிற தண்ணீரில் நான்கைந்த ஓமவல்லி இலைகளை போட்டு கொதிக்க வைத்திடுங்கள். இளம் பச்சை நீராக அந்த நீர் மாறிடும். பின்னர் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இப்படி ஓமவல்லி இலையை போட்டு கொதிக்க வைத்த நீரை குடித்து வந்தால் நல்ல மாற்றம் தெரிந்திடும்.

வெப்பம் :
காய்ச்சலை குணப்படுத்தும் என்று சொல்லி தினமும் தொடர்ந்து ஓமவல்லி இலைகளை எடுக்க வேண்டாம். ஏனென்றால் ஓமவல்லி இலை உடல் வெப்பத்தை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. தொடர்ந்து எடுத்து வந்தால், அது வேறு சில சிக்கல்களை உண்டாக்கிடும்.

வறட்டு இருமல் :
சிலருக்கு வறட்டு இருமல் இருமும் போது நெஞ்சுப்பகுதி அதிகமாக வலியெடுக்கும். இதனைத் தடுக்கவும் ஓமவல்லி பயன்படுகிறது. ஒரு கொத்து ஓமவல்லி இலைகளை எடுத்து அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் கட்டுப்படுத்தப்படும்.

இளைப்பு :
சிலருக்கு அலர்ஜி மற்றும் வேறு சில காரணங்களால் இளைப்பு ஏற்படுவதை தடுக்க ஓமவல்லியை பயன்படுத்தலாம். ஓமவல்லி கொதிக்க வைத்த நீரைக் குடிப்பது இதற்கு சிறந்த தீர்வாக அமைந்திடும். அதோடு தசை சுருங்குதல் உட்பட பல்வேறு பாதிப்பை தடுத்திடும்.

பசி :
மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு அடிப்படை சீரான உணவு மற்றும் தூக்கம். இவற்றில் நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு செரிக்கவும், சரியான முறையில் பசி உணர்வினைத் தூண்டவும் ஓமவல்லி பெரிதும் உதவிடுகிறது. ஓமவல்லியை கஷாயமாக்கி குடித்து வர செரிமானக்கோளாறுகள் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனை நீங்கிடும்.

புகைப்பழக்கம் :
புகைப்பிடிப்பவர்கள் பெரும்பாலானோருக்கு நுரையீரல் பாதிக்கப்படும். இது தான் காலப்போக்கில் புற்று நோயாக மாறுகின்றது. இவர்கள் கற்புரவள்ளி இலையினை சாறெடுத்து அதை நன்கு சுண்டக் காய்ச்சி பாதியளவு எடுத்து வடிகட்டி குடித்தால் புகையினால் உண்டான பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.

விஷப்பூச்சி :
ஓமவல்லி நம் உடலுக்கு மட்டுமல்ல நம்முடைய சுற்றுப்புறத்தைக் கூட சுத்தமாக பயன்படுத்த ஓமவல்லி பெரிதும் உதவிடுகிறது.இது சிறந்த கிருமி நாசனியாக பயன்படும். வீட்டில் இதனை வளர்ப்பதினால் விஷப்பூச்சிகள் வீட்டை அண்டாது. இதிலிருந்து வெளிவரக்கூடிய ஓர் வகை வாசம் கொசு உட்பட பூச்சிகளை விரட்ட உதவிடுகிறது.

Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil

Leave a Reply


Sponsors