சில்லி மயோனைஸ், chilli mayonas recipe in tamil, cooking tips in tamil, samayal kurippu in tamil

தேவையான பொருட்கள்

முட்டையின் மஞ்சள் கரு      –        2

தேங்காய் எண்ணெய்         –        1 கப்

உப்பு                          –        1 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு              –        2 தேக்கரண்டி

கடுகு                         –        1 தேக்கரண்டி

நீர்                            –        தேவையான அளவு

சில்லி பிளேவருக்கு

சில்லி ஃப்ளேக்ஸ்             –        2 தேக்கரண்டி

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.

கடுகை உரலில் போடவும்.

பொடியாக இடித்துக் கொள்ளவும்.

பின்பு மிக்சியை எடுத்துக் கொள்ளவும்.

முட்டையின் மஞ்சள் கருவை அதில் விடவும்.

எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

சிறிது நீர் சேர்க்கவும்.

உப்பு சேர்க்கவும்.

கடுகு தூள் சேர்க்கவும்.

அவற்றை அரைத்துக் கொள்ளவும்.

அரைத்து அரை மணி நேரம் தனியே வைக்கவும். அதன் பின் கலவை சிறிது கெட்டியாகி இருக்கும்.

பின்பு அதனுடன் 1/3 அளவு எண்ணெய் விடவும்.

பின்பு மீண்டும் அரைக்கவும்

அரைத்த பின் கலவை இன்னும் கெட்டியாகும்.

பின்பு மீதமுள்ள 1/3 அளவு எண்ணெயை விடவும்.

மீண்டும் அரைக்கவும். கலவை மீண்டும் சிறிது கெட்டியாகும்.

பின்பு மீதமுள்ள எண்ணெயை விடவும்.

மீண்டும் அரைத்துக் கொள்ளவும்.

கலவை நன்கு கெட்டியாகும்.

பின்பு சில்லி ஃப்ளேக்ஸை மயோனைசுடன் சேர்க்கவும்.

நன்கு கலக்கவும்.

சில்லி மயோனைஸ் ரெடி!!!

Loading...
Categories: Samayal Tips Tamil, Tamil Cooking Tips, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors