முட்டை கீமா, egg keema recipe in tamil, samayal kurippu in tamil, cooking tips in tamil

தேவையான பொருட்கள்

முட்டை              –        4

எண்ணெய்            –        2 மேஜைக்கரண்டி

பே லீஃப்              –        1

ஏலக்காய்            –        2

கிராம்பு               –        2

பட்டை                –        1

ஜீரகம்                –        1/2 தேக்கரண்டி

வெங்காயம்           –        3/4 கப்

பச்சை மிளகாய்       –        1

தக்காளி              –        1/2 கப்

உப்பு                  –        தேவையான அளவு

இஞ்சி பூண்டு விழுது  –      1 தேக்கரண்டி

மிளகாய் தூள்        –        1/2 தேக்கரண்டி

கரம் மசாலா தூள்     –        1 தேக்கரண்டி

மல்லி தூள்          –        1/2 தேக்கரண்டி

பச்சை பட்டாணி      –        1/2 கப்

புதினா                –        கைப்பிடியளவு

செய்முறை

முட்டைகளை வேக வைக்கவும். பின்பு அதன் ஓட்டை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி தனியே வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் ஏலக்காய், பட்டை, பே லீஃப், மற்றும் ஜீரகம் சேர்க்கவும்.

பின்பு வெங்காயம் சேர்த்து லேசாக பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

தக்காளி சேர்க்கவும். மசியும் வரை நன்கு கிளறவும்.

மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் மல்லித் தூள் சேர்க்கவும். மசாலாக்களின் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

பச்சை பட்டாணி சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கிளறவும்.

சிறிது நீர் சேர்க்கவும். பின்பு உப்பு, புதினா, மல்லித் தளை சேர்த்து நன்கு கலக்கவும்.

குழம்பு கெட்டியானதும் முட்டை சேர்க்கவும். முட்டையின் மஞ்சள் கரு உடையாமல் மசால பரவும் படி நன்கு கிளறவும்.

முட்டை கீமா ரெடி!!!

Loading...
Categories: egg recipes in tamil

Leave a Reply


Sponsors