காளான் ஆம்லெட், egg mushroom omelet recipe in tamil, samayal kurippu in tamil, cooking tips in tamil

தேவையான பொருட்கள்

முட்டை               –        2

காளான்                –        1/2 கப்

பூண்டு                 –        3 பற்கள்

பச்சை மிளகாய்        –        2

வெங்காயம்            –        1

குடைமிளகாய்         –        1/4 கப்

மஞ்சள் தூள்           –        தேவையான அளவு

உப்பு                  –        தேவையான அளவு

ஜீரகம்                 –        ஒரு சிட்டிகை

நல்ல மிளகு தூள்     –        ஒரு சிட்டிகை

எண்ணெய்            –        2 தேக்கரண்டி

மல்லி தளை         –        சிறிது

கற்பூரவல்லி           –        விரும்பினால்

செய்முறை

வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, மல்லித் தளை, மற்றம் காளானை நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும். அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் நல்ல மிளகு தூள் சேர்க்கவும்.

நன்கு கலக்கவும்

பானில் எண்ணெய் விட்டு சூடானதும் ஜீரகம் சேர்த்து தாளிக்கவும். பின்பு பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்

வெங்காயம் மற்றும் காளான் சேர்க்கவும்

காளான் மற்றும் வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்கு கிளறவும்

மல்லித் தளை சேர்த்து நன்கு கிளறவும்

பின்பு அவற்றை தனியே எடுத்து வைக்கவும்

பின்பு அதே பானில் முட்டையை ஊற்றவும்

அதன் மீது வதக்கிய காளான் கலவையை வைக்கவும்

முட்டை ஒரு பக்கம் வெந்ததும் அதனை திருப்பிப் போட்டு வேக வைக்கவும்

காளான் ஆம்லெட் ரெடி!!!!!!

Loading...
Categories: egg recipes in tamil

Leave a Reply


Sponsors