மரவள்ளிக் கிழங்கு மசாலா தோசை, maravalli kilanku masala thosai recipe in tamil, tamil samayal kurippu in tamil, cooking tips in tamil

தேவையான பொருட்கள்

புழுங்கலரிசி             –      1 கப்

மரவள்ளிக் கிழங்கு     –      சிறியதாக 1

காய்ந்த மிளகாய்          –      5

சீரகம்                     –      1/2 ஸ்பூன்

காயத் தூள்              –      சிறிதளவு

உப்பு                       –      தேவைக்கேற்ப

எண்ணெய்              –      தேவையான அளவு.

செய்முறை

*மரவள்ளிக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி, 3 முறை பால் போக நன்கு கழுவிக் கொள்ளவும்.

*புழுங்கலரிசியை கழுவி, 2 மணி நேரம் ஊற வைக்கவும். மிளகாய், உப்பு, பெருங்காயம், சீரகம் ஆகியவற்றை

*அரைத்து, அதோடு கிழங்கையும் சேர்த்து அரைக்கவும். பின்னர் ஊறிய அரிசியையும் சேர்த்து நன்றாக

*அரைக்கவும்.ஆட்டிய மாவை தோசை ஊற்றும் பக்குவத்தில் வைத்துக் கொண்டு மெல்லிய தோசைகளாக ஊற்றி வெந்ததும் திருப்பி விட்டு,

*எண்ணெய்விட்டு சிவக்க வெந்ததும் எடுக்கவும். எல்லோரும் சாப்பிட ஏற்ற ஆரோக்கிய தோசை இது.

Loading...
Categories: Dosai recipes in tamil

Leave a Reply


Sponsors