காளான் சூப், mushroom soup recipe in tamil, cooking tips in tamil, samayal kurippu in tamil

தேவையான பொருட்கள்

வெங்காயம்              –        1

பூண்டு                      –        2 பற்கள்

காளான்                    –        200 கிராம்

பட்டர்                       –        1 தேக்கரண்டி

பே லீஃப்                  –        1

மைதா                     –        2 மேஜைக்கரண்டி

நீர்                           –        3 கப்

  பால்                       –        1 கப்

உப்பு                        –        தேவையான அளவு

நல்ல மிளகு            –        தேவையான அளவு

மல்லித் தளை         –       2 மேஜைக்கரண்டி

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

காளானை நறுக்கிக் கொள்ளவும்

பின்பு ஒரு பாத்திரத்தில் பட்டரை போட்டு சூடாக்கவும்

அதனுடன் பே லீஃப் சேர்க்கவும்

வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்கவும்

சிறிது நேரம் வதக்கவும்

வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய காளானை சேர்க்கவும்

நன்கு கிளறவும்

காளானிலுள்ள நீர் வெளியேறும் போது அதன் நிறம் மாறும் அப்போது மைதா மாவை சேர்க்கவும்

நன்கு கிளறவும்

பின்பு நீர் சோ்த்து நன்கு கலக்கவும்

உப்பு மற்றும் நல்ல மிளகு சோ்க்கவும்

பின்பு அதனை கொதிக்க வைத்து கொதித்ததும் சிறிது நேரம் சிம்மில் வைக்கவும்

பின்பு பே லீஃபை எடுத்து விடவும்

பின்பு அதனை சிம்மில் வைத்து அதனுடன் பால் சேர்க்கவும்

நன்கு கலக்கி பின்பு தீயை அணைத்து விடவும்

பின்பு மல்லித்தளை சேர்த்து நன்கு கலக்கவும்

காளான் சூப் ரெடி

Loading...
Categories: Soup Recipe In Tamil

Leave a Reply


Sponsors