Archive for the ‘Beauty Tips Tamil’ Category

கண்ணுக்கு அரைக்கீரை… வளர்ச்சிக்கு முளைக்கீரை… வாய்ப்புண்ணுக்கு மணத் தக்காளி… ஞாபக சக்திக்கு வல்லாரை… சரும அழகுக்கு  பொன்னாங்கண்ணி… இப்படி ஒவ்வொரு கீரைக்கும் ஒவ்வொரு மருத்துவக் குணம் உண்டு. தினம் ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால்  அழகும் ஆரோக்கியமும் இளமையும் நீடிக்கும் என்பது காலங்காலமாக நிரூபிக்கப்பட்டு வருகிற உண்மை. ‘‘உடலின் உள் உறுப்புகளுக்கு நல்லது செய்கிற அத்தனை கீரைகளும் இலை வகைகளும் வெளிப்பூச்சுக்கும் நல்லது செய்யும்’’ என்கிறார் அழகுக்கலை  நிபுணர்   Read More ...

Categories: Beauty Tips Tamil

கோடைக் காலத்தில் வெயிலானது சருமத்தில் அதிகமாகப் படும். இதனால் இதுவரை அழகாக பராமரித்து வந்த சருமமானது, வெயிலில் சுற்றும் போது நிறம் மாறிவிடும். இவ்வாறு சருமத்தின் நிறம் மாறுவதற்கு பெரும் காரணம், சூரியனிடமிருந்து வெளிவரும் புறஊதாக்கதிர்கள் சரும செல்களை பாதிப்பதே ஆகும். மேலும் இத்தகைய நிலையானது நீடித்தால், சரும புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளது. எனவே இத்தகைய நிலையை மாற்றுவதற்கு முறையான பராமரிப்பானது கோடைகாலத்தில் அதிகம் தேவைப்படும். குறிப்பாக   Read More ...

ஒவ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இந்தத் தாவரம் குறிப்பிட்ட வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். ஆனால் நாம் அவற்றைத் தெரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்பது வேதனையான உண்மை. அப்படிப்பட்ட தாவரங்கள் குறித்த புரிதலையும் அவற்றைப் பயன்படுத்தும் விதத்தையும் இத்தொடர் மூலமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இத்தொடரில் உள்ள விஷயங்கள் அனைத்தும் மூல நூல்களைத் தழுவியே இருக்கும் என்பதால், இதைக்கொண்டு சுய மருத்துவம்   Read More ...

கருமை நிறம் கொண்ட அடர்த்தியான அழகான முடியை பெற கற்பூரத்தை எப்படி பயன் படுத்த வேண்டும் தெரியுமா? வாரம் ஒருமுறை தேங்காய் எண்ணெயை சற்று சுடவைத்து, முடியில் அடிவரை விரல்களால் தடவி மசாஜ் செய்யவும். ஒரு மணி நேரம் கழித்து மிருதுவான துண்டை இளஞ்சூடான நீரில் பிழிந்து தலையில் கட்டிக் கொண்டால் எண்ணெய் தலையில் உறிஞ்சிக் கொள்ளும். பிறகு 20 நிமிடம் கழித்து ஷாம்பூ அல்லது சீயக்காய் தேய்த்து நன்கு   Read More ...

தலையில் முடி அதிகம் கொட்டுவதற்கு ஓர் காரணமாக இருப்பது பொடுகு தான். தற்போது மாசு நிறைந்த சுற்றுச்சூழலால் தலையில் அழுக்குகள் அதிகம் சேர்ந்து, பொடுகுகளாக மாறுகின்றன. இப்படி பொடுகுகள் அதிகரிப்பதால், மயிர்கால்கள் வலுவிழந்து உதிர ஆரம்பிக்கின்றன. இந்நிலையைத் தடுக்க பல வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் பேக்கிங் சோடா. அதுமட்டுமின்றி, பேக்கிங் சோடா முடியை வலிமையாக்குவதோடு, முடியின் நிறத்தையும் பாதுகாக்கும். சரி, இப்போது பேக்கிங் சோடாவை எப்படி தலைக்கு   Read More ...

சிவப்பழகு கிரீம்கள் மூலம் தோலுக்கு நிறம் அளிக்கும் நிறமியான மெலனின் அளவை படிப்படியாக குறைக்க முடியும் எனக் கூறி பேர்னஸ் கிரீம் விளம்பரங்கள் தொலைக்காட்சியில் வருவதைக் காண முடியும். இது சரியானதா, இது அறிவியல் பூர்வமாக நிரூபணமாகியுள்ளதா, பக்கவிளைவுகள் என்னென்ன என விரிவாகப் பார்ப்போம். அழகு கிரீம் பிரியரா நீங்கள்? உஷார்! அழகு கிரீம்களுக்கு இந்தியா-பெரிய சந்தையாக உள்ளது. சவூதி அரேபியா, வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா, மலேசியா, தாய்லாந்து, தூர கிழக்கு   Read More ...

பருக்களின் தொல்லை அல்லது பிரச்சனை இருப்பவர்களில் 61% பேருக்கு முதுகு மற்றும் மார்பிலும் பருக்கள் ஏற்படும் பிரச்சனை இருக்கிறது. பெண்களுக்கு முகத்தில் ஏற்படும் பருக்களை விட முதுகு மற்றும் மார்பில் ஏற்படும் பருக்களை அகற்றுவது தான் கடினம். சிலர் இதைப்பற்றி வெளியில் கூறுவது இல்லை, சிலர் இந்த முதுகு மற்றும் மார்பு போன்ற இடங்களில் பருக்கள் தோன்றினால் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அதன் மூலம் எரிச்சல் அல்லது அரிப்பு   Read More ...

சரும பிரச்சனைகள் மட்டுமின்றி, கூந்தல் பிரச்சனைகளும் ஏற்படும். எனவே இத்தகைய பிரச்சனைகளுக்கெல்லாம் சிறந்த தீர்வைத் தரக்கூடிய சக்தி எலுமிச்சைக்கு உள்ளது. ஏனெனில் எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் நிறைய ஆன்டி-செப்டிக் பொருள் உள்ளதால், அவை சருமம் மற்றும் கூந்தலில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்துவிடும். குறிப்பாக, கோடைகாலம் என்பதால், வெளியே செல்ல பயமாக இருக்கும். ஆகவே அப்போது அழகைப் பராமரிப்பதற்கு வீட்டில் ஜூஸ் போட வைத்திருக்கும் எலுமிச்சையை வைத்து, அழகை பராமரிக்கலாம்.   Read More ...

வாழை இலைகள் இந்தோனேஷியா, இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் பயிரிடப்படுகிறது. இந்த வாழை இலைகளை இப்பொழுது எல்லாம் நாம் எங்கும் காண முடியும். அந்தளவுக்கு அதன் பயன் பரந்து விரிந்து கிடக்கிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் வாழை மரம் அதிகமாக பயிரிடப்படுகிறது. பொதுவாக வாழை இலைகள் உணவு சாப்பிடுவதற்கு, மருந்தாக, உடல் நல சிகச்சைக்கு, பூஜை படையலுக்கு இப்படி நிறைய பயன்களை தருகிறது. இந்த வாழை இலை நமது கூந்தல் பராமரிப்பிலும்   Read More ...

கண்களுக்கு ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். இதை வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் “ப்ளிச்” ஆகிவிடும். தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி பிரகாசமாக்கவும் ஆரஞ்சு பயன்படுகிறது. கண்களைச் சுற்றி சிலருக்கு கண்களுக்குக் கீழ் இரண்டு கன்னப் பகுதியிலும் கருமை படர்ந்து திட்டுத்திட்டாக இருக்கும் அதற்கு, வேப்பங்கொழுந்துடன், ஆரஞ்சு தோல் விழுது   Read More ...

பேக்கிங் சோடா பேஸ்ட் பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும் செய்து வந்தால், முகத்தில் நல்ல மாற்றம் தெரியும். வாழைப்பழம் மற்றும் பால் வாழைப்பழத்தை மசித்து, அதில் பால் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.   Read More ...

சிலரது முகத்தில் குழிகள் அதிகம் காணப்படும். முகத்தில் குழிகள் இருந்தால், அவை முக அழகை கெடுப்பதோடு, பல்வேறு சரும பிரச்சனைகளான வெள்ளைப்புள்ளிகள், கரும்புள்ளிகள், முகப்பரு போன்றவை அதிகம் வருதற்கு வழிவகுக்கும். • வெள்ளரிக்காய் முகத்தில் இருக்கும் குழிகளை மறைக்க உதவும். வெள்ளரிக்காயை துருவி, அதில் சிறிது ரோஸ்வாட்டர் சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தில் உள்ள   Read More ...

Sponsors