Archive for the ‘Maruthuva Kurippugal in Tamil’ Category

எண்ணெய் தேய்த்து குளிப்பதனால் ஏற்படும் பலன்கள்: # இரைப்பு, இளைப்பு நோய்கள், மூக்கடைப்பு, உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம், முகத்தில் உண்டாகும் நோய்கள், அதிவியர்வை நீங்கும். # ஐம்புலன்களுக்கும் பலம், தெளிவு உண்டாகும். # தலை, முழங்கால்கள் உறுதியடையும். முடி கறுத்து வளரும். # தலைவலி, பல்வலி நீங்கும். # தோல் வறட்சி நீங்கி தோல் பளபளப்பாகும், # உடல் பலமாகும், # சோம்பல் நீங்கும், # நல்ல குரல்   Read More ...

ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும். ஓமம், மிளகு வகைக்கு 35 கிராம் எடுத்து நன்கு   Read More ...

அவரையின் நற்குணங்கள் பற்றி இரண்டு இதழ்களுக்கு முன்பு பார்த்தோம். பெயரிலும், உருவத்திலும் அவரையை நினைவுப்படுத்துகிற கொத்தவரங்காயும் அதேபோல எண்ணற்ற பலன்களைக் கொண்டதுதான். கொத்துக் கொத்தாய்க் காய்க்கக்கூடியது என்பதாலேயே கொத்தவரை என்று இதற்குப் பெயர் வந்தது. கொஞ்சம் இனிப்புச்சுவை கொண்ட காய் என்பதால் சீனி அவரை என்றும் சொல்வதுண்டு.இந்தியா முழுமையிலும் பரவலாகப் பயிரிடப்படும் கொத்தவரங்காய், ஆங்கிலத்தில் Cluster bean என்று அழைக்கப்படுகிறது. Cyamopsis tetragonoloba என்பது இதன் தாவரவியல் பெயர் ஆகும்.   Read More ...

இனிப்பு ஆபத்தானது என்பதை ஈராயிரம் முறைகள் சொல்லக் கேட்டிருப்போம். ஆரோக்கிய வாழ்க்கைக்கு இனிப்பைத் தவிர்க்க வேண்டும் என்பதே  மருத்துவம் சொல்லும் முதல் தகவல். பருமன், நீரிழிவு உள்ளிட்ட பல பிரச்னைகளாலும் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவர்கள் விதிக்கிற  தடைப்பட்டியலில் முதன்மையானது இனிப்பு. ஆனால், இத்தனை பழிகளும் சர்க்கரைக்கே. சர்க்கரைக்கு மாற்றாகப் பரிந்துரைக்கப்படுகிற வெல்லத்தில்  பெரிய வில்லங்கம் எதுவும் இல்லை! இன்னமும் கிராமப்புறங்களில் காபி, டீ உள்பட எல்லாவற்றுக்கும் சர்க்கரைக்குப் பதில் வெல்லமும் கருப்பட்டியும்   Read More ...

இருமல், இளைப்பு, ஆஸ்துமா குணமாக ஆகாயத் தாமரை *ஆதொண்டை வேரை இடித்து நல்லெண்ணெய்யில் போட்டுக்காய்ச்சி, அந்த எண்ணெய் யைத் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் மூக்கடைப்பு, தொண்டைக் கட்டு, தலைவலி குணமாகும். *ஆடாதொடை வேர், கண்டங்கத்திரி வேர், திப்பிலி  மூன்றையும் ஒன்றாக பொடி செய்து சாப்பிட்டால் இருமல் நிற்கும். *ஆடாதொடை இலையை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட் டால் சளித் தொல்லை தீரும்.   *ஆகாயத் தாமரை இலைச்சாறுடன்   Read More ...

தினமும் நாம் காய்கறி சந்தையில் பார்க்கும் ஒரு உணவுப் பொருள் மட்டுமல்ல புதினா. இது ஒரு சிறந்த மூலிகை உணவும் கூட. சொல்லப் போனால் இது ஒருவகை மூலிகை உணவென்றும், இதனால் பல உடல்நலக் கோளாறுகளுக்கு தீர்வுக் காண முடியும் என பலருக்கும் தெரியாது. புதினாவை உணவில் சேர்த்து தான் சாப்பிட வேண்டும் என்றில்லை. வெறுமென அதை நீரில் கழுவி வாயில் மென்று கூட சாப்பிடலாம்.   தினமும் புதினாவை   Read More ...

கருணைகிழங்கில் விட்டமின்-C, விட்டமின் B, மாங்கனீஸ், மினரல்ஸ், ரிபோபிளேவின், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துக் காணப்படுகிறது. இந்த கிழங்கை நாம் மற்ற கிழங்கை போன்று சாதாரணமாக சாப்பிட முடியாது, ஏனென்றால் இது நாக்கில் நமைச்சலை ஏற்படுத்தும். எனவே இக்கிழங்கை நன்றாக வேகவைத்து தோல் உரித்து புளி சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.   பயன்கள் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி மற்றும் மாதவிடாய் ஏற்படுவதில் பிரச்சனை போன்றவற்றை சீராக்கும். கருணைக்கிழங்கு   Read More ...

பற்களில் காவி கலந்த மஞ்சள் கறை தோன்றுவது ஃப்ளூரோசிஸ் எனும் நோயின் முக்கிய அறிகுறி. ஃப்ளோரைடு அதிகமாவதால் இது ஏற்படுகிறது. பற்கள் பலம் பெற பால், தயிர், நெய், பசலை, அவரை ஆகியவற்றை சேர்த்துக் கொள்வது நலம். தாவரக் கொழுப்பிலும் வாசலைன் கலப்பிலும் தயாரிக்கப்படும் சோப்புகள் உடலுக்கு நல்லது. கண்களில் தூசு விழுந்தால் நன்றாக மூடிக் கொண்டு விழிகளை அசையாமல் வைத்துக் கொள்ளுங்கள்.   நகப்பூச்சு போட்டுக் கொள்வதால் சிலருக்கு   Read More ...

பழங்களின் அண்ணாச்சி, அது தாங்க நம்ம அன்னாசிப் பழம். அன்னாசிப் பழத்தை அப்படியே சாப்பிட சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அன்னாசிப் பழத்தின் மேல் சிறு சிறு முட்கள் காணப்படுவது தான் அதற்குக் காரணமாக இருக்கும். ஆனால், அன்னாசிப் பழத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட ஜாம், ஜுஸ், சர்பத் வேண்டாம் என்று கூறாமல் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட அன்னாசிப் பழத்தில் இருக்கும் நமக்குத் தெரியாத சில நன்மைகளை இப்போது தெரிந்து கொள்வோம் வாருங்கள்…..   Read More ...

வெயில் காலம் வந்துவிட்டாலே வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க என்ன என்ன செய்யலாம் என்றே பலரும் யோசிப்பர். மேலும் சிலர் இளநீர், நுங்கு, குளிர்பானங்கள் போன்றவற்றை குடிப்பார்கள். இவற்றை எல்லாம் குடித்தால் தேவாமிர்தம் போல் தான் இருக்கும். ஆனால், மறுபடியும் நாக்கு வறண்டு மீண்டும் உஷ்ணத்தைக் கிளப்பும். இதிலிருந்து தப்பிக்க வேண்டுமென நினைத்தால் தர்பூசணியை ட்ரை பண்ணுங்க… வருடத்தில் ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு பழம் கிடைக்கும். ஆனால், தர்பூசணிக்கு சீசனே   Read More ...

Recent Recipes

Sponsors