Archive for the ‘Mooligai Maruthuvam’ Category

மஞ்சள் கரிசலாங்கண்ணியைத்தான் மிகவும் விசேஷமானது. இரண்டையும்  சமைத்துச் சாப்பிடலாம். இதுதான் சமையலுக்கு ஏற்றது. நாட்டு வைத்தியத்தில் பெரும் பயனைத் தருவது இக்கீரை மஞ்சள் காமாலையைப் போக்குவதில் பெரும் பங்காற்றுகிறது. கரிசலாங்கண்ணியில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. சித்தர் பாடல்: குரற்கம்மற் காமாலை குட்டமொடு சோபை  யுற்றபாண்டு பன்னோ யொழிய- நிரற் சொன்ன மெய்யாந் தகரையொத்த மீளி ண்ணு நற்புலத்துக் கையாந் தகரையொத்தக் கால்.      – அகத்தியர் குணபாடம்   Read More ...

மூக்கிரட்டை கீரை மண்ணில் புல் வெளிகளிலும், நிலங்களிலும் படர்ந்து வளரும் கொடி இனத்தை சார்ந்தது. இதில் இரண்டு வகைகள் உண்டு. பொதுவாக மூக்கிரட்டையானது அது சிறிய சற்று வட்டமான இலைகளையும் சிவந்த பூக்களையும் கொண்டு தரையில் படரும் பூண்டு வகை ஆகும். இதைப் போலவே உருவம் கொண்டு சற்று பெரிய இலைகளையும் தடுமனான, வட்டமான வடிவத்தையும் வெண்மையான பூக்களையும் கொண்டு, காம்புகள் சற்று பருமனாகவும் கொண்டு விளங்குவது. ஆயுர்வேத நூல்களின்படி   Read More ...

மணத்தக்காளி இலை சிறிது இனிப்புச்சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. சருமம் தொடர்பான பல நோய்கள் வராமல் கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது. இதில் வைட்டமின் இ, டி அதிக அளவில் உள்ளன. நார்ச்சத்து மிகுந்தது. இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், வயிற்றில் ஏற்படும் புண்களைக் குணப்படுத்தும்..          மணத்தக்காளிக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால், இருமல், இளைப்பு பிரச்னை குணமாகும். வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும் சக்தி மிகுந்தது இந்தக் கீரை.   Read More ...

மஞ்சள் காமாலை, மேகம், கண்நோய், பித்தநோய் சிறுநீர் பெருக்கியாகவும், வெப்பு அகற்றியாகவும் வீக்கம், கட்டி, ஆகியவற்றைக் கரைத்து நரம்பு சதை ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும் செயற்படும். தீராத தலைவலி, கல்லீரல் பழுது, இரத்த சோகை இவைகளுக்கு மருந்தாகும். கீழாநெல்லி செடி 4 ஏலக்காய் அரிசி, கறிமஞ்சள் தூள் இவை வகைக்கு ஒரு காசு எடை சேர்த்து ஈரவெங்காயம் ஒன்று சேர்த்து பசுவின் பால் விட்டரைத்து அரைத்த கல்கத்தை பால்   Read More ...

ஒவ்வொரு வீட்டின் சமையல் கூடங்களிலும் சீரகம், சோம்பு, கடுகு, வெந்தயம், கருவாப்பட்டை, கிராம்பு ஏலம் என ஒரு மருத்துவக் களஞ்சியமே அடங்கியிருக்கும். இவற்றை அன்றாட உணவில் சேர்த்து சாப்பிடும் நாம் அதன் மருத்துவ பயன்களைப் பற்றி ஏனோ தெரிந்துகொள்ளவில்லை. ஆனால் நம் முன்னோர்கள் இவற்றைப் பற்றி நன்றாக தெரிந்திருந்ததால்தான் அவற்றை தினமும் உபயோகப்படுத்தவே இவற்றை சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் வைத்தார்கள். நம் முன்னோர்கள் அறிந்ததை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்   Read More ...

சீரகம், சோம்பு, வெந்தயம், கடுகு, மிளகு, இலவங்கப்பட்டை, கசகசா என பல மருத்துவப் பொருட்களை அன்றாடஉணவில் சேர்த்து ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்தவர்கள்தான் நம் முன்னோர்கள்.   தற்போது உணவே மருந்து மருந்தே உணவு என்ற கோட்பாடு தலைதூக்கி பல்வேறு வகைகளில் இதைபாடங்களாகவும், ஆலோசனைகளாகவும் செய்துவருகின்றனர். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்றபழமொழிக்கேற்ப இந்த குறைவற்ற செல்வத்தைப் பெற உணவில் மேற்கூறிய பொருட்களை சேர்ப்பது நல்லது. கருவாப் பட்டை என   Read More ...

காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் காணப்படும் தொட்டாற்சுருங்கி செடி காந்த சக்தி உடையது என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தெய்வீக மூலிகையை தொடர்ந்து 48 நாட்டு தொட்டுவந்தால் மனோசக்தி அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 1300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கிரேக்க மருத்துவத்தில் தொட்டாற்சுருங்கி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தற்போது ஆயுர்வேத மருத்துவத்திலும் யுனானி மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. தோல்வியாதிகள், குழந்தைப்பேறு பிரச்சனை, ஆண்மைகுறைபாடு போன்ற நோய்களுக்கு இன்றைக்கு மிகச்சிறந்த மருத்துவ மூலிகையாக உள்ளது தொட்டாற்சுருங்கி.. .   Read More ...

பசியைத் தூண்ட பசியால் அவதிப்படுபவர்களை விட பசியின்றி அவதிப்படுவர்கள் அதிகம். வயிற்றில் உள்ள வாயுக்கள் மந்தமாகி பசியற்ற தன்மையை ஏற்படுத்திவிடுகின்றன. இதனால் பசி என்பதே சிலருக்கு ஏற்படுவதில்லை. இவர்கள் நிலவேம்பு சமூலத்தை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனை காலையில் மட்டும் கஷாயம் செய்து குடித்து வந்தால் பசி நன்கு உண்டாகும். குடல் பூச்சி நீங்க வயிற்றுப் பூச்சிகள் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. இதனால் உடல்   Read More ...

பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்து தான் குழந்தைகளுக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. இதனால்தான் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உடல்நிலை காரணமாகவும், சத்தான உணவுகளை உட்கொள்ளாததாலும் சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும். தாய்பால் சுரக்காத பெண்கள் வீட்டிலேயே எளிதான மருத்துவ முறைகளை கையாள்வதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான அளவு தாய்பால் சுரக்கும். மூலிகை கசாயம்:   Read More ...

ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும். ஓமம், மிளகு வகைக்கு 35 கிராம் எடுத்து நன்கு   Read More ...

அவரையின் நற்குணங்கள் பற்றி இரண்டு இதழ்களுக்கு முன்பு பார்த்தோம். பெயரிலும், உருவத்திலும் அவரையை நினைவுப்படுத்துகிற கொத்தவரங்காயும் அதேபோல எண்ணற்ற பலன்களைக் கொண்டதுதான். கொத்துக் கொத்தாய்க் காய்க்கக்கூடியது என்பதாலேயே கொத்தவரை என்று இதற்குப் பெயர் வந்தது. கொஞ்சம் இனிப்புச்சுவை கொண்ட காய் என்பதால் சீனி அவரை என்றும் சொல்வதுண்டு.இந்தியா முழுமையிலும் பரவலாகப் பயிரிடப்படும் கொத்தவரங்காய், ஆங்கிலத்தில் Cluster bean என்று அழைக்கப்படுகிறது. Cyamopsis tetragonoloba என்பது இதன் தாவரவியல் பெயர் ஆகும்.   Read More ...

இருமல், இளைப்பு, ஆஸ்துமா குணமாக ஆகாயத் தாமரை *ஆதொண்டை வேரை இடித்து நல்லெண்ணெய்யில் போட்டுக்காய்ச்சி, அந்த எண்ணெய் யைத் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் மூக்கடைப்பு, தொண்டைக் கட்டு, தலைவலி குணமாகும். *ஆடாதொடை வேர், கண்டங்கத்திரி வேர், திப்பிலி  மூன்றையும் ஒன்றாக பொடி செய்து சாப்பிட்டால் இருமல் நிற்கும். *ஆடாதொடை இலையை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட் டால் சளித் தொல்லை தீரும்.   *ஆகாயத் தாமரை இலைச்சாறுடன்   Read More ...

Recent Recipes

Sponsors