கொத்தமல்லி சப்பாத்தி |kothamalli keerai chapathi samayal kurippu

தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – 2 கப் உப்பு – தேவையான பொருட்கள் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் உள்ளே வைப்பதற்கு… கொத்தமல்லி – 1 கப் (நறுக்கியது) மல்லி தூள் – 1 டீஸ்பூன் சீரகப் பொடி – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது) உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு பௌலில் கோதுமை மாவு, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, உருண்டைகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் உள்ளே வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

coriander paratha recipe in tamil,kothamalli keerai chapathi samayal kurippu,cooking tips in tamil kothamalli keerai chapathi, keerai chapathi  vagaigal

 

பின்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடேற்ற வேண்டும். அதற்குள்ள ஒவ்வொரு உருண்டையாக எடுத்து, அதனை தேய்த்து, அதன் நடுவே கலந்து வைத்துள்ள கலவையை கொஞ்சம் வைத்து நான்கு புறமும் மூடி, மீண்டும் தேய்க்க வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் தேய்க்க வேண்டும். இறுதியில் தேய்த்து வைத்துள்ளதை தோசைக்கல்லில் போட்டு முன்னும் பின்னும் எண்ணெய் ஊற்றி, பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சூப்பரான கொத்தமல்லி சப்பாத்தி ரெடி!!!

Loading...
Categories: Parotta Recipe In Tamil, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors