கம்பு உருளைக்கிழங்கு சப்பாத்தி |aloo chapati recipe in tamil

தேவையான பொருட்கள்: கம்பு மாவு – 1 கப் உருளைக்கிழங்கு – 1 (வேக வைத்தது) வெங்காயம் – 1 (சிறியது மற்றும் பொடியாக நறுக்கியது) சீரகம் – 1 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் மாங்காய் தூள் – 1 டீஸ்பூன் கொத்தமல்லி – சிறிது உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு தண்ணீர் – 1 கப் செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு, வேக வைத்த உருளைக்கிழங்கு, வெங்காயம், சீரகம், மிளகாய் தூள், மாங்காய் தூள்,

 

aloo chapati cooking tips in tamil,aloo chapati  samayal ,tamil nadu style aloo chapati  seimurai,aloo chapati  in tamil

கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை 30 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும். பின்பு அந்த மாவை சிறு உருண்டைகளாக்கி, சப்பாத்தி போன்று தேய்த்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், ஆரோக்கியமான கம்பு உருளைக்கிழங்கு சப்பாத்தி ரெடி!!!

Loading...
Categories: Parotta Recipe In Tamil, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors