பிராமண சமையல் முருங்கைக்கீரை சாம்பார்|brahmin samayal murungai keerai sambar

முருங்கைக்கீரை- 2 கோப்பை அளவு,
துவரம் பருப்பு- 150 கிராம்,
தக்காளி- 4,
வெங்காயம்-5,
பச்சை மிளகாய்-3,
சாம்பார் பொடி- தேவையான அளவு,
பூண்டு- சிறிதளவு,
தேங்காய் துருவல்- சிறிதளவு,
மஞ்சள்- சிறிதளவு,
சீரகம், கடுகு, உளுந்தம் பருப்பு- தலா ஒரு தேக்கரண்டி,
சமையல் எண்ணெய், மிளகாய் வத்தல், உப்பு- தேவையான அளவு.

keerai sambar,murungai keerai sambar recipe in tamil ,tamil cooking tips murungai keerai sambar,murungai keerai sambar seimurai,murungai keerai sambar seivathu eppadi

 

செய்முறை:-

• கீரையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

• அடுப்பில் வாணலியை வைத்து, தேவையான தண்ணீரில் பருப்பை வேகவிட வேண்டும்.

• வெங்காயம், தக்காளி, மிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

• தேங்காய் துருவல், வத்தல், பூண்டு, சீரகம், மஞ்சள் ஆகியவற்றை அம்மியில் அரைத்து, விழுதாக எடுத்துக் கொள்ளவும்.

• பருப்பு வெந்த பின்னர், அதை நன்றாக கிளறி விட்டுக்கொண்டே கீரையை அதில் போட வேண்டும்.

• கீரையும், பருப்பும் வெந்த பின்பு, சாம்பார்பொடியை போட வேண்டும். அரைத்த விழுதையும், போட்டு நன்றாக கலக்கவும்.

• தேவையான உப்பு சேர்த்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய் போட்டு மூடி வைத்திட வேண்டும். மீண்டும் ஒரு கொதி நிலைக்கு வந்ததும், மூன்று முறை தொடர்ந்து கிளறி விடுங்கள்.

• மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, சாம்பாருடன் சேர்த்தால், முருங்கைக்கீரை சாம்பார் தயார் ஆகிவிடும்.

Loading...
Categories: Iyengar Samayal, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம், பிராமண சமையல்

Leave a Reply


Sponsors