ஐயங்கார் பனீர் பட்டர் மசாலா|brahmin paneer butter masala recipe in tamil

தேவையான பொருட்கள் :

பனீர் : 100 கிராம் (சிறு சிறு cube ஆக கட் பண்ணி கொள்ளவும்)
வெங்காயம் : 2 Nos (நறுக்கி வதக்கி மிக்சியில் அரைக்கவும்)
தக்காளி : 3 Nos (கொதிக்கும் தண்ணீரில் போட்டு தோல் உரித்து அரைத்துக் கொள்ளவும்)
இஞ்சி பூண்டு பேஸ்ட் : 1 டி ஸ்பூன்
முந்திரி : 10 Nos (ஊறவைத்து அரைத்து பேஸ்ட் ஆக வைக்கவும்)
மிளகாய் பொடி : 2 டி ஸ்பூன் (அவரவர் காரம்)
தனியா பொடி : 2 டி ஸ்பூன்
சீரகப்பொடி : 1 டி ஸ்பூன்
ஏலக்காய் பொடி : 2 Nos
பட்டை : 1 சிறிய துண்டு
கிராம்பு : 3 Nos
பிரிஞ்சி இலை : 1
எண்ணை : 2 டேபிள் ஸ்பூன்
பட்டர் : 150 கிராம்
அன்னாசிப்பூ : 1 (மசாலா பொருள் ஸ்டார் வடிவில் இருக்கும்)
பால் : 1/2 டம்ளர்
ப்ரெஷ் கிரீம் : 2 டி ஸ்பூன்
தண்ணீர் : 1 1/2 to 2 டம்ளர்
கஸ்தூரி மேத்தி : சிறிதளவு (காய்ந்த வெந்தய கீரை)
உப்பு : ருசிகேற்ப
கொத்தமல்லி தழை : சிறிதளவு

brahmin paneer butter masala tamil,recipe in tamil brahmin paneer butter masala,samayal kurippu brahmin paneer butter masala,brahmin samal list tamil

 

செய்முறை :

 • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து 1 டேபிள் ஸ்பூன் எண்ணை விட்டு அதனுடன் பட்டர் பாதி அளவு சேர்த்து உருகியவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரிஞ்சி இலை போட்டு வறுக்கவும்.
 • பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்.
 • பச்சை வாசனை போனவுடன், அரைத்த வெங்காய விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
 • எண்ணை பிரியும் பொழுது தக்காளி விழுது சேர்க்கவும்.
 • அதையும் வதக்கியவுடன், மிளகாய் பொடி, தனியா பொடி, சீரகப்பொடி சேர்த்து நன்றாக வதக்கவும்.
 • பச்சை வாசனை போனவுடன் தண்ணீர் & பால் சேர்க்கவும்.
 • கொதி வந்தவுடன், உப்பு, முந்திரி பேஸ்ட் சேர்க்கவும்.
 • கிரேவி திக்காக இருந்தால் சிறிது பாலோ அல்லது தண்ணீரோ சேர்க்கலாம்.
 • கஸ்தூரி மேத்தியை சிறிது எடுத்து கசக்கினால் போல் போடவும்.
 • அடுப்பை அனைத்து விட்டு கொத்தமல்லி & ப்ரெஷ் கிரீம், சேர்க்கவும்.
 • பிறகு வாணலியில் எண்ணை விட்டு பனீர் cubeகளை deep fry செய்து க்ரேவியில் சேர்க்கவும்.
 • Serving bowl இல் மாற்றி மேலே மீதி இருக்கும் butter ஐ போடவும்.
 • சுவையான பனீர் பட்டர் மசாலா ரெடி.
Loading...
Categories: Iyengar Samayal, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம், பிராமண சமையல்

Leave a Reply


Sponsors