கறிவேப்பிலை ஈரல் பொரியல்|curry leaves liver fry in tamil

தேவையானபொருட்கள்
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
ஈரல் – கால் கிலோ
வெங்காயம் – 2
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
தக்காளி – ஒன்று
தனி மிளகாய்த் தூள் – ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி தழை – சிறிது
தாளிக்க :
பிரிஞ்சி இலை – ஒன்று
பெருஞ்சீரகம் – அரை தேக்கரண்டி
பட்டை – சிறு துண்டு
கிராம்பு – 2
கறிவேப்பிலை – ஒரு இணுக்கு
எண்ணெய் – 2 தேக்கரண்டி

 

curry leaves liver fry in tamil

செய்முறை
வாணலியில் எண்ணெய் ஊற்றி பிரிஞ்சி இலை, பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

அதில் பொடியாக‌ நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

பின்னர் தக்காளி சேர்த்து நன்கு பிரட்டவும். தக்காளி குறைவாக‌ சேர்த்தால் தான் இந்த பொரியல் நன்றாக‌ இருக்கும்.

தக்காளி நன்கு வதங்கியதும் தனி மிளகாய்த் தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், தேவையான‌ அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டவும்.

அதனுடன் நன்கு சுத்தம் செய்த‌ ஈரலை சேர்த்து ஒரு கையளவு தண்ணீர் தெளித்து நன்கு பிரட்ட‌வும். இதை மூடி போட்டு நன்கு வேக‌ விடவும். 2 நிமிடத்திற்கு ஒரு முறை திறந்து அடி பிடிக்காமல் கிளறி விடவும்.

ஈரல் நன்கு வெந்த‌ பின் ஒரு கைப்பிடியளவு கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கவும்.

கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.

Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors