ரவா முறுக்கு| Diwali samayal kurippu

தேவையான பொருட்கள்: அரிசி மாவு/இடியாப்ப மாவு – 1/2 கப் ரவை – 1/4 கப் வெண்ணெய் – 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் எள் – 1/2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் – தேவையான அளவு செய்முறை: முதலில் ரவையை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின் வாணலியில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க வைக்க வேண்டும். நீரானது நன்கு கொதித்ததும், அதில் ரவையை சேர்த்து நன்கு கட்டி சேராதவாறு கிளறி விட வேண்டும்.

Diwali samayal kurippu ,Diwali samayal kurippu in tamil ,cooking tips Diwali samayal kurippu ,Diwali samayal kurippu tamil font,Diwali samayal kurippu online,rava murukku

 

ரவையானது வெந்ததும் அடுப்பை அணைத்து சிறிது நேரம் குளிர வைத்து, பின் அதில் அரிசி மாவு, மிளகாய் தூள், வெண்ணெய், எள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, லேசாக தண்ணீர் தெளித்து நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு தட்டில் துணியை அல்லது பிளாஸ்டிக் கவரை விரித்து முறுக்கு அச்சில் சிறிது மாவை வைத்து, தட்டின் மேலே முறுக்குகளாக பிழிய வேண்டும். இறுதியில் ஒரு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெயானது நன்கு காய்ந்ததும், அதில் பிழிந்து வைத்துள்ள முறுக்கை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், ரவா முறுக்கு ரெடி!!!

Loading...
Categories: Diwali Recipes in tamil, Tamil Cooking Tips, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors