காரைக்குடி முட்டை குழம்பு |karaikudi muttai kulambu

தேவையான பொருட்கள்: முட்டை – 5 சின்ன வெங்காயம் – 200 கிராம் (தோலுரித்து நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன் தக்காளி – 1 (நறுக்கியது) கடுகு – 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன் சிக்கன் தூள் – 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் முட்டையை நீரில் போட்டு நன்கு வேக வைத்து இறக்கி, முட்டை ஓட்டை நீக்கிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

karaikudi-egg-curry in tamil ,karaikudi muttai kulambu ,karaikudi muttai kulambu samayal kurippu ,tamil nadu karaikudi muttai kulambu,karaikudi egg curry cooking tips in tamil

 

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அதில் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு மணம் வரும் வரை வதக்கி விட வேண்டும். பிறகு அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி, மிளகாய் தூள், மல்லித் தூள், சிக்கன் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கிளறி விட வேண்டும். பின் அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு, இறுதியில் முட்டையை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கினால், காரைக்குடி முட்டைக் குழம்பு ரெடி!!!

Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors