கரிசலாங்கண்ணிக் கீரை சப்பாத்தி |karisalankanni keerai recipes

தேவையான பொருட்கள்: கரிசலாங்கண்ணிக் கீரை – 1 கட்டு கோதுமை மாவு – 1 கப் கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன் சாம்பார் பவுடர் – 1 டீஸ்பூன் கரம் மசாலா – 1/2 டீஸ்பூன் தயிர் – 1/5 கப் ஆலிவ் ஆயில் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு தண்ணீர் – தேவையான அளவு செய்முறை: முதலில் கரிசலாங்கண்ணிக் கீரையின் இலைகளை நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,

 

karisalankanni keerai recipes,karisalankanni keerai ,karisalankanni keerai payangal,karisalankanni keerai tamil

அதில் கீரையை போட்டு, சிறிது நேரம் வதக்க வேண்டும். பின்பு அதனை இறக்கி குளிர வைத்து, பின் மிக்ஸியில் போட்டு, தயிர் ஊற்றி மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு பௌலில் அரைத்து வைத்துள்ள கீரை, கோதுமை மாவு, கடலை மாவு, சாம்பார் பவுடர், கரம் மசாலா, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு அதனை சிறு உருண்டைகளாக்கி, சப்பாத்தி போன்று தேய்த்து, ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும். இறுதியில் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் அதில் தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளைப் போட்டு, முன்னும் பின்னும் எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுத்தால், ஆரோக்கியமான கரிசலாங்கண்ணிக் கீரை சப்பாத்தி ரெடி!!!

Loading...
Categories: Parotta Recipe In Tamil, Tamil Cooking Tips, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors