ஈரல் வறுவல்|liver fry in tamil

உங்களில் எத்தனை பேருக்கு ஈரல் பிடிக்கும்…ஈரல் சமைப்பதற்கு முன் நன்கு கவனமாக கழுவ வேண்டும், ஈரல் மென்மையானது சமைத்த பிறகு அதன் சிகப்பு நிறம் போய் இருக்க வேண்டும் அத்தோடு அதிக நேரம் அவிய விட்டால் அது இறுகி

போய் கடிக்க கஸ்டமாக இருக்கும் ஆகவே கவனமாக சமைக்க வேண்டும்.இனி ஈரல் வறுவல் செய்ய தேவையான பொருட்களை பார்ப்போம்;

ஆட்டு ஈரல் அல்லது கோழி ஈரல் 1/2 கிலோ

வெங்காயம் 1

உள்ளி 6 அல்லது 7 பல்

கருவேப்பிலை தேவையான அளவு

மஞ்சல் தேவையான அளவு[1 தேக்கரண்டி]

உப்பு தேவையான் அளவு

மிளகாய்த் தூள் தேவையான அளவு[3 தேக்கரண்டி]

கறுவா 1 துண்டு

ஏலக்காய் 2

லவங்கம் 1

எண்னெய் தேவையான அளவு[3தொடக்கம் 5 தேக்கரண்டி]

வெங்காயத்தாள் 1 கட்டு

 

liver fry in tamil,liver fry samayal kurippu,cooking tips in tamil liver fry,liver fry how to make in tamil

இனி எப்படி செய்வது எனப் பார்ப்போம்;

முதலில் ஈரலை கழுவி அளவான துண்டுகளாக வெட்டவும் [ஆகவும் சின்னதாக வெட்ட வேண்டாம் கரைந்து விடும்] வெட்டிய ஈரலுடன் உப்பு,மஞ்சல்,மிளகாய்த்தூள் போட்டு ஒரு பக்கம் வைக்கவும்.

அடுப்பில் சட்டியை வைத்து சூடாக்கிய பின் எண்னெய் விட்டு வெங்காயம்,உள்ளீ, போட்டு பொன்னிறமாக வதக்கவும் அத்துடன் கருவேப்பிலை,வாசனைத் திரவியங்கள் போட்டு வதக்கவும் வதங்கியவுடன் ஈரலை சேர்த்து வதக்கவும்,கவனமாக கிளறவும் தண்ணீர் தேவையாயின் விடவும்

உப்பு தூள் சரியாய் இருக்குதா எனப் பார்க்கவும், அவிந்தவுடன் இறக்கு முன் சின்னதாக வெட்டிய வெங்காயத்தாள் சேர்க்கவும்.விருப்பியவர்கள் தேசிக்காய் சேர்க்க விரும்பின் சேர்க்கலாம்

Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors