முட்டை & சோயா பொரியல்|muttai poriyal in tamil

தேவையானவை:
முட்டை 11
Bread Crumbs 1 கோப்பை
எண்ணெய் – பொரிக்க

சோயாகறிக்கு:
சோயா 1 கோப்பை
வெங்காயம் 1
பச்சை மிளகாய் 2
மிளகாய் தூள் 1 மே.க
மஞ்சள் தூள் 1/4 மே.க
கடுகு 1/2 தே.க
பெரும் சீரகம் 1/2 தே.க
கறிவேப்பிலை 2 மே.க
உப்பு தேவையான அளவு

 

muttai poriyal, muttai poriyal in tamil ,muttai poriyal cooking tips,muttai poriyal seivathu eppadi

செய்முறை:
1. 10 முட்டைகளை வேக வைத்து, ஓடை உடைத்து, பாதியாக வெட்டி கொள்ளுங்கள்.
2. சோயா கறிக்கு:
அ) சோயாவை கொதிநீரில் 5 நிமிடங்களுக்கு ஊறவிட்டு, நீரை வடித்து எடுத்து கொள்ளுங்கள்.
ஆ) வெங்காயம், மிளகாயை சிறிதாக அரிந்து கொள்ளுங்கள்.
இ) ஒரு சட்டியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடு ஏறும் போது கடுகு, சீரகம், வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, தூள்களை முறையே சேர்த்து நன்றாக வதக்குங்கள். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் சோயாவை சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள்.
3. பாதி முட்டைக்கு எலுமிச்சை பழம் அளவு உருண்டை கறியை எடுத்து முட்டையின் மறுபாதி ஆக்குங்கள்.
4. உருட்டிய உருண்டையகளை அடித்த முட்டையில் போட்டு எடுத்து, பின்னர் ப்ரட் க்ரம்ஸில் உருட்டி எடுங்கள்.
5. அளவான சூடு கொண்ட எண்ணெயில் பொரித்து எடுங்கள்.

ஜோடி: தக்காளி சோஸ்

கவனிக்க வேண்டியவை:

1. காரத்தை கூட்டி குறைக்கலாம்.
2. அவித்த முட்டையின் மஞ்சள் பகுதியை எடுத்து சோயா கறி கிளறும் போது சேர்த்து கிளறலாம்.
3. சோயா தனியேவா என நினைப்பவர்கள் ஒரு கரட்டை சீவி சேர்த்து கொள்ளுங்கள்.
4. 50:50 என பெயர் சூட்டிய பெருமை என்னை மட்டுமே சேரும்.

Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors