கொத்து கோழி|kothu kozhi recipe in tamil

கோழி – அரைக் கிலோ வெங்காயம் – ஒன்று தக்காளி – பாதி இஞ்சி பூண்டு விழுது – ஒரு மேசைக்கரண்டி மிளகாய் தூள் – ஒரு மேசைக்கரண்டி தனியா தூள் – ஒரு மேசைக்கரண்டி மஞ்சள்தூள் – அரை தேக்கரண்டி பெருஞ்சீரக பொடி – ஒரு மேசைக்கரண்டி கறிவேப்பிலை – 2 கொத்து எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு
கோழியை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் கோழித் துண்டுகளை போட்டு இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேக விடவும். குக்கர் ப்ரஷர் அடங்கியதும் திறந்து கோழித்துண்டுகளை எடுத்து விட்டு தண்ணீரை தனியே எடுத்து விடவும் (இதில் சூப் செய்யலாம்). மீண்டும் கோழித் துண்டுகளை குக்கரில் போட்டு மிளகாய் தூள், தனியாதூள், பெருஞ்சீரக தூள், தேவையான அளவு உப்பு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து மூடி போடாமல் கொதிக்க விடவும். கோழி முழுமையாக வெந்து தண்ணீர் அரை பாகம் வற்றியதும் கோழித் துண்டுகளை தனியே எடுத்து ஆற வைக்கவும். குக்கரின் உள் இருக்கும் கிரேவியை தனியே எடுத்து வைக்கவும்.

kothu kozhi samayal ,kothu kozhi seimurai ,kothu kozhi tamil nadu recipe,kothu kozhi recipe cooking tips tamil font

 

கோழித்துண்டுகளிலிருந்து எலும்பை நீக்கி விட்டு சதைபற்றுள்ள பகுதியை மட்டும் எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கின வெங்காயத்தை போட்டு 2 சிட்டிகை உப்பு போட்டு வதக்கவும். வெங்காயம் கண்ணாடி போல் வதங்கியதும் தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். வெங்காயம், தக்காளியுடன் உதிர்த்த கோழியை சேர்த்து ஐந்து நிமிடங்கள் கிளறவும். தனியே எடுத்து வைத்திருக்கும் கிரேவியை சேர்த்து கிளறவும்.(கிரேவி அவரவர் ருசிக்கேற்ப முழுவதுமாகவோ அல்லது பாதியளவோ சேர்க்கவும்). கொத்து பரோட்டா போல் உதிரியாக வரும் வரை மிதமான தீயில் வைத்து கிளறவும். கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய்(விருப்பப்பட்டால் மட்டும். ஆனால் சேர்த்தால் சுவையும் மணமும் தனி) சேர்த்து ஒரு நிமிடம் கிளறி இறக்கவும். சுவையான கொத்துக் கோழி தயார். மிகவும் ட்ரையாக செய்யாமல் சற்று ஈரப்பதத்துடனேயே (கிரேவி போல் இருக்கக் கூடாது) இறக்கி சப்பாத்தியில் ரோல் செய்து சாப்பிடலாம். ட்ரையாக செய்தால் ரசம் சாதத்தோடு மிக சுவையாக இருக்கும்.

Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors