வெஜிடபிள் சப்பாத்தி|vegetables chapathi recipe in tamil

சப்பாத்தி – 8 முதல் 10,
மெலிதாக நறுக்கிய வெங்காயம்,
தக்காளி, குடமிளகாய்  –  தலா 2,
பச்சை மிளகாய் – 4,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 1 கட்டு,
துருவிய கேரட் – 1 கப்,
எண்ணெய் – கால் கப்,
மிளகாய் பொடி – 4 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.
புதிதாக சப்பாத்தி செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. இரவு பண்ணி, மீந்து போன சப்பாத்திகளை மீண்டும் தோசைக்கல்லில் போட்டு, நெய் விட்டு சிவக்க வறுத்துவிட்டு, அதையே உபயோகிக்கலாம்.

 

vegetables chapathi tamil recipe,vegetables chapathi seivathu eppadi,vegetables chapathi cooking tips tamil,vegetables chapathi samayal kurippu

கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். குடமிளகாய், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

மிளகாய் பொடி சேர்த்து வதக்கியதும், உப்பு சேர்த்து, நறுக்கி, வறுத்து வைத்துள்ள சப்பாத்தித் துண்டுகளையும் சேர்த்துக் கலந்து, கீழே இறக்கி வைத்து, துருவிய கேரட் மற்றும் கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும். விருப்பப்பட்டால் சிறிது கரம் மசாலாவும் சேர்த்துக் கொள்ளலாம். ஜலதோஷமும் காய்ச்சலும் உடல்வலியும் போக மிக்ஸ்டு வெஜிடபிள் சப்பாத்தி சாப்பிடலாம்

Loading...
Categories: Parotta Recipe In Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors