வெந்தயக்கீரை ரொட்டி |vendhaya keerai chapathi in tamil

தேவையான பொருட்கள்: வெந்தயக் கீரை – 1 கட்டு (பொடியாக நறுக்கியது) கோதுமை ரவை – 1 1/2 கப் அரிசி மாவு – 3/4 கப் பொட்டுக்கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன் வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் பேஸ்ட் – 1 டீஸ்பூன் இஞ்சி – 1 துண்டு (சாறு எடுத்துக் கொள்ளவும்) உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை ரவை, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, இஞ்சி சாறு, கீரை,

vendhaya keerai chapathi,vendhaya keerai chapathi seivathu eppadi,vendhaya keerai chapathi recipe in tamil ,vendhaya keerai chapathi seimurai

பச்சை மிளகாய் பேஸ்ட் சேர்த்து, தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை சிறு உருண்டைகளாக்கிக் கொள்ள வேண்டும். அதே சமயம் அடுப்பில் தோசைக்கல்லை வைத்து காய வைக்க வேண்டும். பின்பு ஒரு மென்மையான துணியை நீரில் நனைத்து, நன்கு பிழிந்து, பின் அதில் ஒவ்வொரு உருண்டைகளையும் வைத்து ரொட்டி போன்று கையால் தட்டி, சூடாக உள்ள தோசைக்கல்லில் போட்டு, முன்னும் பின்னும் எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் ரொட்டிகளாக சுட்டு எடுத்தால், சுவையான வெந்தயக்கீரை இஞ்சி ரொட்டி ரெடி!!!

Loading...
Categories: Parotta Recipe In Tamil, Tamil Cooking Tips, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors