கோபி மஞ்சூரியன்|gobi manchurian recipe in tamil

தேவையான பொருட்கள்:

காலிஃபிளவர் – 1
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
முட்டை – ஒன்று
அஜினோமோட்டோ – 2 சிட்டிகை
மிளகுத்தூள் – அரைத் தேக்கரண்டி
எண்ணெய் – அரை லிட்டர்
கார்ன்ஃப்ளார் – 25 கிராம்
மைதா மாவு – 50 கிராம்
தக்காளி சாஸ் – கால் கப்
சோயா சாஸ் – ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லி – ஒரு கொத்து

Gobi manchurian in tamil,Gobi manchurian recipe cooking tips tamil,Gobi manchurian seivathu eppadi,Gobi manchurian tamil samayal kurippu

 

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து முழு காலிஃபிளவரை அதில் போட்டு 5 நிமிடம் கழித்து எடுக்க வேண்டும். காலிஃபிளவரை எடுத்து கீழே சற்று தடிமனாக உள்ள பகுதியை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு அடித்து கலக்கிக் கொள்ள வேண்டும்.

மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவு, கார்ன் ஃபளார், அஜினோமோட்டோ, உப்பு கால் தேக்கரண்டி மற்றும் தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்திருக்கும் காலிஃபிளவரை முதலில் அடித்து வைத்துள்ள முட்டை கருவில் தோய்த்து எடுத்து, பிறகு கரைத்து வைத்திருக்கும் மாவில் தோய்த்து எண்ணெயில் போட வேண்டும்.

சுமார் 5 நிமிடம் கழித்து காலிபிளவர் இளஞ்சிவப்பு நிறத்துக்கு வந்ததும் எடுத்து விட வேண்டும். பின்னர் வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கின வெங்காயம் போட்டு வதக்க வேண்டும். பின்னர் அதனுடன் பொடியாய் நறுக்கின பச்சை மிளகாய், சோயா சாஸ் சேர்த்து கிளற வேண்டும்.

அதன் பிறகு தக்காளி சாஸ் ஊற்றி உப்பு, அஜினோமோட்டோ, மிளகுத்தூள் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கிளற வேண்டும். பிறகு பொரித்து வைத்திருக்கும் காலிஃபிளவர் துண்டங்களை ஒவ்வொன்றாய் வாணலியில் போட வேண்டும். மசாலாவுடன் நன்கு சேருமாறு துண்டங்களை போட்டு 2 நிமிடம் நன்கு கிளறி இறக்க வேண்டும்.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors