சப்பாத்தி குருமா,chapati kurma seivathu eppadi

தேவையான  பொருட்கள் :

 • கேரட் , பீன்ஸ்  – 1 கப்
 • முட்டகோஸ் , உருளை கிழங்கு – 1/2 கப்
 • பட்டாணி – 1/2 கப்
 • வெங்காயம் – 1
 • தக்காளி  – 2
 • தேங்காய் – 1/2 மூடி
 • மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
 • மிளகாய்  தூள் – 1.1/2 ஸ்பூன்
 • இஞ்சி  பூண்டு  விழுது  – 2 ஸ்பூன்
 • சோம்பு  – 1/2 ஸ்பூன்
 • பட்டை  – 1
 • லவங்கம்  – 3
 • கசகசா  – 1 ஸ்பூன்
 •  பொதினா  இலை – சிறிது
 • எண்ணெய் – 3 ஸ்பூன்
 • உப்பு – தேவையான  அளவு
 • கறி மசால்  தூள்  -1/2 ஸ்பூன்
 • கறிவேப்பிலை – சிறிது
 • முந்தரி – 5 – 6
 • பச்சை  மிளகாய் –  2  

சப்பாத்தி குருமா,chapati kurma seivathu eppadi

 

செய்முறை :

 1. முதலில்  கடாயில்   எண்ணெய்  ஊற்றி  காய்ந்தாவுடன்   பட்டை, சோம்பு,  லவங்கம்,  இஞ்சி பூண்டு விழுது,  வெங்காயம்,  தக்காளி, பச்சை மிளகாய்  சேர்த்து  வதக்கவும்.
 2. பின்னர்  நறுக்கிவைத்துள்ள  காய்கறிகளை  சேர்த்து  வதக்கவும்.
 3. அடுத்து  தேவையான அளவு உப்பு மற்றும்  தண்ணீர்  சேர்த்து  வேகவைக்கவும்.
 4.  மிக்ஸ்யில் தேங்காய், கசகசா, மஞ்சள் தூள், கறி மசால் தூள், முந்தரி,   பொதினா இலை சேர்த்து  நைசாக  அரைத்து கொள்ளவும் .
 5. அரை  பதம்  காய்  வெந்தயுடன்   அரைத்தா மசாலை  சேர்த்து  கொதிக்கவவிடவும்.
 6. சப்பாத்தி குருமா ரெடி.
Loading...
Categories: Parotta Recipe In Tamil, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors