பிரெட் ஃப்ரூட் ரோல்,bread fruit rolls in tamil

தேவையான பொருட்கள் :
கோதுமை பிரெட் – 5 ஸ்லைஸ்,
பொடியாக நறுக்கிய ஆப்பிள் – 2 டீஸ்பூன்,
நறுக்கிய ஆரஞ்சு, கிவி, பப்பாளி, வாழைப்பழம் மற்றும் திராட்சைப்பழம் தலா – 2 டீஸ்பூன்,
முந்திரி, உலர் திராட்சை (சேர்த்து) – 4 டீஸ்பூன்,
மில்க்மெய்ட் – 5 டீஸ்பூன்,
தேன் – சிறிதளவு,
சில்வர் பேப்பர் (ஃபாயில் பேப்பர்) தேவைக்கேற்ப.

 

%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%af%82%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b0%e0%af%8b%e0%ae%b2%e0%af%8dbread-fruit-rolls-in-tamil

செய்முறை:
* முந்திரி, உலர் திராட்சை மற்றும் எல்லா பழங்களையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.
* பிரெட் துண்டுகளை ஓரம் வெட்டிக்கொள்ளவும்.
* பிரெட் மீது மில்க்மெய்ட் ஒரு டீஸ்பூன் தடவி நடுவில் கொஞ்சம் பழக்கலவை, சிறிது தேன் சேர்த்து பரப்பவும்.
* பிரெட்டை சில்வர் பேப்பர் மீது வைத்து இறுக்கமாக ரோல் செய்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுத்துப் பரிமாறவும்.

Loading...
Categories: Tamil Cooking Tips, இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors