சிக்கன் ப்ரைட் ரைஸ்,chicken fried rice seivathu eppadi

பாசுமதி அரிசி – 1 கப்
வெங்காயம் – 1 கப்
எலும்பு இல்லாத கோழி – 1/2கப்
கேரட் – 1
பீன்ஸ் – 15
வெங்காய தாள் – 1
குடைமிளகாய் – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜைகரண்டி
முட்டை -3
சில்லி சாஸ் – 1 மேஜைகரண்டி
சோயா சாஸ் – 1 மேசைக்கரண்டி
மிளகு தூள்-1 மேசைக்கரண்டி
நெய் – 1/4 கப்
உப்பு – தேவையான அளவு

chicken-fried-rice-tamilchicken-fried-rice-tamilchicken-fried-rice-tamilnadu-stylechicken-fried-rice-tamilnadu

செய்முறை :

* குடைமிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

* பீன்ஸ், வெங்காயத்தாளை கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்

* சாதம் உதிர் உதிரக வடித்து ஆற வைத்து கொள்ளவும்.

* கோழி கழுவிச் சுத்தம் செய்து கொண்டு, உப்பு சேர்த்து தனியே வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

* ஒரு வாணலியில் நெய் ஊற்றி அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அடுத்து அதில் சிறிது வெங்காயத்தாளையும் வதக்கிக் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி கொள்ளவும்.

* அதன் பின் காய்கறிகளைச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

* பின் முட்டை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.

* கோழி துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கவும்.

* அடுத்து அதில் அதில் உப்பு, சோயா சாஸ், சில்லி சாஸ், மிளகுதூள் சேர்த்து மூடி வைத்து வேகவைக்கவும்.

* காய்கறி பாதி வெந்தவுடன் ஆற வைத்த சாதத்தை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil, Rice Recipes In Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors