ஆந்திரா பருப்புப் பொடி,paruppu podi recipe in tamil

துவரம் பருப்பு – 1/4 கப்
கடலைப் பருப்பு – 1/4 கப்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 10
காய்ந்த கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
பெருங்காயம் – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – கால் டீஸ்பூன்.

வெறும் கடாயில் பருப்பு வகைகளை தனித்தனியாக நன்கு வாசம் வந்து சிவக்கும் வரை வறுத்து எடுக்கவும். சீரகத்தையும் வெறும் கடாயில் வறுக்கவும். சிறிது எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயும்  கறிவேப்பிலையும் சேர்த்து நன்கு வறுத்து எடுக்கவும். சிறிது ஆற விட்டு, உப்பு சேர்த்து அனைத்தையும் அரைத்து, காற்று புகாமல்  பாட்டிலில் மூடி வைக்கவும்.

பூண்டு பருப்புப் பொடி

 

%e0%ae%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bfparuppu-podi-rec

துவரம் பருப்பு – 1/4 கப்
கடலைப் பருப்பு – 1/4 கப்
பாசிப் பருப்பு – 1/4 கப்
சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
பூண்டு – 8 பல்
காய்ந்த மிளகாய்  – 10
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – சில துளிகள்.

வெறும் கடாயில் பருப்பு வகைகளை தனித்தனியே நன்கு வாசம் வரும் வரை சிவக்க வறுக்கவும். சீரகத்தையும் தனியே வறுக்கவும். எண்ணெய் விட்டு, மிளகாய் போட்டு, நன்கு சிவக்க வறுத்து, அந்தச் சூட்டில் கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து சிறிது வறுக்கவும்.  நன்கு ஆறியதும் அனைத்தையும்  சேர்த்துப் பொடித்து சூடான சாதத்தில் நெய்யுடன் சேர்த்து பரிமாறவும்.

உங்கள் கவனத்துக்கு…

பாசிப் பருப்பு சேர்த்தும், பொடியுடன் சிறிது எள் வறுத்தும் சேர்க்கலாம். மணமும் சுவையும் கூடும். மிக நைசான பொடியாக அரைக்க வேண்டாம். இந்தப் பொடிகளுடன் சிறிது கருப்பு உளுந்தும் புளியும் சேர்த்தும் அரைக்கலாம். இட்லிப் பொடியாக உபயோகிக்கச் சிறந்தது. கருப்பு உளுந்து, கருப்பு எள் – இரண்டும் கலந்தும் செய்யலாம். கொள்ளு (கானம்) சேர்த்துச் செய்தால் இன்னும் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும். வல்லாரை, தூதுவளை, முடக்கத்தான், பிரண்டை போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை உலர வைத்து, வறுத்து, பொடியாக்கிச் சேர்த்தும் பருப்புப் பொடி செய்யலாம். நிறைய கறிவேப்பிலை வறுத்துச் சேர்த்து, கறிவேப்பிலைப் பொடியாகவும் செய்யலாம். கூட்டு, அப்பள வடாம்கள் சரியான ஜோடிப் பொருத்தம். வத்தக்குழம்பைத் தொட்டுக்கொண்டே கூட, இதை ஒரு பிடி பிடிக்கலாம். சாம்பார், மோர்க்குழம்பும் ஓ.கே! குழந்தைகளுக்கு பருப்புப் பொடி சாதமாக டிபன்பாக்ஸுக்கும் கொடுக்கலாம். ஆறினாலும் ருசியாகவே இருக்கும். அதிக காரம் விரும்பாதவர்கள் இட்லி, தோசைக்கு மிளகாய் பொடிக்குப் பதிலாக இதையே பயன்படுத்தலாம்.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors