டோக்ளா,inippu vagaigal in tamil

தேவையானவை:

ரவை- 1 டம்ளர்
தயிர்- 2 தேக்கரண்டி
பச்சைமிளகாய்- 2
சீரகம்- 1/2 தேக்கரண்டி
எலுமிச்சைச் சாறு- 1 தேக்கரண்டி
ஈனோ(ப்ரூட் சால்ட்)- 1 டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் பொடி- சிறிதளவு
கறிவேப்பிலை- காம்பு நீக்கி பொடியாக நறுக்கியது

தாளிக்க:

எண்ணெய்- 1 டீஸ்பூன்
கடுகு- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 4 இலைகள்

%e0%ae%9f%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%b3%e0%ae%beinippu-vagaigal-in-tamil

செய்முறை:

1. ரவையை லேசாக வறுக்கவும்(சிவக்கத் தேவையில்லை, பச்சை வாசனை போகும் அளவிற்கு வறுத்தால் போதும்)
2. பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3. ரவை, பச்சைமிளகாய், தயிர், சீரகம், எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, ஈனோ சால்ட் அனைத்தையும் ஒன்றாக இட்லி மாவு பதத்திற்குக் கரைக்கவும்.
4. வாயகன்ற பாத்திரத்தில் 1 டம்ளர் நீர் விட்டு கொதிக்க விடவும்.
5. வட்ட வடிவத் தட்டோ, பாத்திரமோ அதில் எண்ணெயைத் தடவி இந்த மாவைக் கொட்டி அடுப்பில் 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
6. வாணலியில் எண்ணெயிட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வைத்துக் கொள்ளவும்.
7. ரவை வெந்து விட்டதா என்பதைப் பார்க்க ஒரு குச்சியை உள்ளே விட்டுக் கண்டறியலாம்(குச்சியில் மாவு ஒட்டி இருந்தால் கூட 2 நிமிடங்கள் வேக வைக்கலாம்)
8. வெந்ததை வெளியில் எடுத்து ஒரு அகலமான தட்டில் திருப்பிப் போடவும். வட்ட வடிவத்தில் இருக்கும் டோக்ளாவைச் சிறு சிறு சதுரங்களாக்கி தாளித்த கடுகினைத் தெளிக்கவும். அல்லது துண்டுகளாக்கிய டோக்ளாவை கடுகு தாளிசத்தில் லேசாகப் பிரட்டி எடுக்க சுவையான டோக்ளா தயார்.
9.இது குஜராத்தியர்களின் சிற்றுண்டி வகை.

 

கூடுதல் குறிப்புகள்:

1. உப்புமா என்பதே சீக்கிரத்தில் செய்து விடக் கூடிய சிற்றுண்டி. அதை விடச் சீக்கிரமாக இந்த டோக்ளாவைச் செய்து முடிக்கலாம். உப்புமாவா? என்று அலறுபவர்கள் கூட நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு டோக்ளாவை உண்பர்.
2. புளிப்புச் சட்னி அல்லது தக்காளி சட்னி இதற்கு இணை.
3. குஜராத்தியர்களின் விருப்ப உணவான இது சத்தான உணவும் கூட.
4. மேற்கூறிய முறையில் உப்புமாவிற்குச் செய்யும் காய்களை வேக வைத்து சேர்த்துக் கூட வெஜிடேபிள் டோக்ளாவாகச் செய்து அசத்தலாம்.
5. மூன்றே நிமிடங்களில் மைக்ரோவேவிலோ ஓவனிலோ டோக்ளாவைச் செய்யலாம்.
6. மேற்கூறிய முறையில் ரவைக்குப் பதிலாக கடலைமாவைச் சேர்த்தும் செய்யலாம். ஈனோ சால்ட் டோக்ளாவை மொறுமொறுப்பாக்கும், அந்த உப்பு இல்லாமலும் செய்யலாம்.
7. இந்த முறையில் இட்லிமாவை வேக விட்டு சதுரங்களாக வெட்டி சில்லி இட்லிக்கள் செய்யலாம்.

Loading...
Categories: Tamil Cooking Tips, இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors