அகத்திக்கீரை சாம்பார்,agathi keerai sambar in tamil

துவரம் பருப்பு – 100
அகத்திக் கீரை – அரை கிண்ணம்
வெங்காயம்- 2
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
கடுகு – சிறிதளவு
பூண்டு – 8 பல்
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
சீரகத்தூள் – அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் – அரை தேக்கரண்டி
பெருங்காயம் – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – 2 மேசைக் கரண்டி

%e0%ae%85%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%80%e0%ae%b0%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8dagathi-keerai-samb

செய்முறை:

பருப்பை அலசி அத்துடன் பூண்டு,
தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சீரகத்தூள், பாதி வெங்காயம் சேர்த்து குக்கரில் 3 விசில் வைத்து இறக்கி பருப்பை மசித்துக் கொள்ளவும்.

அகத்திக் கீரையை(agathi keerai) சிறிது தண்ணீரில் தனியாக வேக வைத்துக் கொள்ளவும்.
பின்னர், வாணலியில் கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம் தாளிக்கவும். மீதி உள்ள வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

அவற்றுடன் பெருங்காயம், உப்பு, மிளகாய்த் தூள், வெந்த பருப்பைச் சேர்த்து தேவையான தண்ணீர்விட்டு கிளறி கொதிக்க விடவும்.

ஒரு கொதி வந்ததும், அத்துடன் வேக வைத்த அகத்திக் கீரையைச் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். சுவையான சத்தான அகத்திக் கீரை சாம்பார் தயார்.

Loading...
Categories: arokiya unavu in tamil, Saiva samyal, Sambar Recipe in tamil, சைவம்

Leave a Reply


Sponsors