கிரில் சிக்கன்,Barbecue chicken Cooking Tips Tamil,Grilled Chicken Samayal kurippu tamil

 • முழுக்கோழி – ஒன்று
 • எலுமிச்சை – ஒன்று
 • தந்தூரி மசாலா – 3 தேக்கரண்டி
 • மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
 • மஞ்சள் தூள் – ஒரு பின்ச்
 • ஆலிவ் ஆயில் – 2 தேக்கரண்டி
 • உப்பு – சுவைக்கு
 • இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
 • தயிர் – 2 தேக்கரண்டி
 • சப்பாத்தி மாவு – 2 பெரிய உருண்டைகள்
 • வெள்ளைத்துணி – சிறிது
 • விரும்பினால்:
 • பேபி உருளை – 10
 • கலர்பொடி – ஒரு பின்ச்

%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8dbarbecue-chicken-cooking-tips-tamilgrilled-chicken-samayal-kurippu-tamil

க்ரில்டு சிக்கன் செய்ய சிக்கன் வாங்கும் பொழுது 700 – 800 கிராம் அளவில் இருப்பதாக பார்த்து எடுத்துக் கொள்ளவும். சிக்கனை சுத்தம் செய்து கடைசியாக அதில் மஞ்சள்தூள் சேர்த்து சுத்தம் செய்து உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

தயிருடன் இஞ்சி பூண்டு விழுது, தந்தூரி மசாலா, மிளகாய் தூள், உப்பு கலந்து சிக்கன் முழுவதும் நன்கு பூசி விடவும். சிக்கன் கலராக இருக்க வேண்டுமென்றால் சிறிது கலர் பொடி சேர்த்துக் கொள்ளலாம். மசாலா பூசிய சிக்கனை 5 மணி நேரம் ப்ரிட்ஜில் வைக்கவும். விருப்பப்பட்டால் பேபி உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மிளகாய் தூள், உப்பு கலந்து சிக்கனுள் வைக்கவும்.

மசாலா தடவிய சிக்கன் முழுவதும் ஆலிவ் ஆயிலை தடவி வெள்ளை துணியை வைத்து முழுவதுமாக சுற்றி வைக்கவும்.

பிசைந்து வைத்திருக்கும் சப்பாத்தி மாவு உருண்டையை பெரிய மெல்லிய வட்டமாக தேய்த்து வெள்ளை துணியில் மூடி வைத்திருக்கும் சிக்கனை நடுவில் வைத்து மூடவும்.

இதைப் போல் மற்றொரு முழு சிக்கனையும் சப்பாத்தி மாவை வைத்து மூடி தயாராக எடுத்து வைக்கவும்.

அவனை முற்சூடு செய்து வைக்கவும். நன்கு மூடிய சிக்கனை முற்சூடு செய்த அவனில் 200 F ல் 1 1/2 மணி நேரம் க்ரில் செய்யவும். அவ்வப்பொழுது சிக்கனை திருப்பி விடவும்.

மேலிருக்கும் சப்பாத்தி தீந்து போனாலும் உள்ளிருக்கும் சிக்கன் தீயாது, நன்கு வெந்து விட்டதை பார்க்க சப்பாத்தி மற்றும் துணியை சற்று நீக்கி விட்டு சரி பார்க்கவும்.

போதுமான அளவு வெந்ததும் அவனில் இருந்து எடுத்து சப்பாத்தியை உடைத்து விட்டு துணியை அகற்றி, கத்திரியால் நறுக்கி மெயோனைஸுடன் பரிமாறவும்.

Barbecue chicken Recipe In Tamil

தேவையானப் பொருட்கள்:

 • சிக்கன் – ஒரு கிலோ
 • உப்பு – தேவைக்கு
 • காஷ்மீர் மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
 • (அ) சாதா மிளகாய் தூள் + ரெட் கலர்
 • ஷான் தந்தூரி மசாலா – இரண்டு தேக்கரண்டி
 • (அ) சக்தி மசாலா
 • தயிர் – அரை கப்
 • எலுமிச்சை சாறு – இரண்டு (லெமென்)
 • பூண்டு – ஐந்து பல்லு
 • பச்ச மிளகாய் – ஆறு
 • ஆலிவ் ஆயில் – நான்கு மேசைக்கரண்டி
செய்முறை

 • சிக்கனை பெரிய ஹோல் லெக் பீஸாக வாங்கி வந்து அதை கொழுப்பெடுத்து விட்டு வினிகர் ஊற்றி ஊற வைத்து கழிவி தன்ணிரை வடித்து வைக்கவும்.
 • பூண்டு,பச்சமிளகாய் மிக்சியில் அரைத்து அத்துடன் தயிர்,ஷான் மசாலா,மிளகாய் தூள், உப்பு, லெமென் ஜுஸ் கலந்து சிக்கனில் தடவவும்.
 • தடவி ஒரு மணி நேரம் ஊறீயதும் ஆலிவ் ஆயிலை ஊற்றி மறுபடியும் முன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
 • ஊறியதும் கேஸ் ஓவன் (அ) கிரில் (அ) BBQ பண்ணவும்.
 • பிரீ ஹீட் செய்து விட்டு 20 நிமிடம் வைக்கவும்.
 • BBQ அடுப்பில் கரிமூட்டி மேலே உள்ள கம்பியில் வைத்து சுட்டு சாப்பிடவும்.

குறிப்பு: குபூஸ்,கார்லிக் சாஸ், (வெங்காயம் கேரட்,வெள்ளரிக்காய்,தக்காளி )சாலட், வட்ட வட்டமாக அரிந்து வைத்து பெப்பர் தூள், உப்பு தூள் தூவி லெமென் பிழிந்து சாப்பிடவும்.

Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors