கர்ப்ப காலத்தில் பாஸ்தா சாப்பிடலாமா,karpa kala unavu muraigal Tamil language

சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் கொண்டு செய்யப்படும் இத்தாலிய உணவுகளில் ஒன்று தான் பாஸ்தா. தற்போது இந்த பாஸ்தா உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்றாக உள்ளது.

இந்த பாஸ்தாக்களை கர்ப்பிணிகள் சாப்பிடுவதா நல்லதா என்ற கேள்வி அனைவரது மனதிலும் நிச்சயம் இருக்கும். பாஸ்தாக்களில் நிறைய வகைகள் உள்ளன. மேலும் பாஸ்தாக்களில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, பி மற்றும் போலிக் ஆசிட் போன்றவை நல்ல அளவில் உள்ளன. இருப்பினும் கடைகளில் விற்கப்படும் பாஸ்தாக்கள் ஆரோக்கியமற்றது. மாறாக வீட்டில் தயாரிக்கப்படும் பாஸ்தாக்களை சாப்பிடுவது நல்லது.

பெண்கள் கர்ப்ப காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியிருப்பதால், உண்ணும் உணவுகளில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். அதற்காக பாஸ்தா கெட்டதா என்று கேட்கலாம். ஆனால் அதற்கான சரியான விடை, எந்த பாஸ்தாவை சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் மற்றும் எத்தனை முறை சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்து தான் சொல்ல முடியும்.

%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be

பாஸ்தாவில் கர்ப்பிணிகளுக்கு தேவையான நிறைய சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால், அளவாக உட்கொண்டால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. இருப்பினும் அதிகமாக சாப்பிட்டால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். இப்போது கர்ப்பிணிகள் பாஸ்தாவை சாப்பிடுவது நல்லதா என்று மேலும் பார்ப்போம்.

பொதுவாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது. அத்தகைய பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ஒன்று தான் பாஸ்தா. இருப்பினும் இதை அளவாக ஆரோக்கியமான முறையில் சமைத்து சாப்பிடலாம்.

பாஸ்தாவில் ஜிங்க் மற்றும் மக்னீசியத்தை உடலானது உறிஞ்சுவதைத் தடுக்கும் பொருளான பைடேட்ஸ் உள்ளது. அதுமட்டுமின்றி, அதில் ஜங்க் உணவுகளில் உள்ள பொருட்கள் இரத்தத்தில் எளிதில் கலக்குமாறான லெக்டின்ஸ் என்னும் பொருளும் உள்ளது. அதற்காக இது முழுவதும் ஆரோக்கியமற்றதாக, அறவே தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் இல்லை. கர்ப்பிணிகள் ஆசைப்பட்டால், அளவாக ஒருமுறை மட்டும் சாப்பிடலாம்.

பாஸ்தாவானது உடலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். எனவே இதனை தினமும் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும் இதனை சமைக்கும் போது, அத்துடன் காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இரத்த அழுத்தமானது சீராக உள்ளவர்கள், பாஸ்தாவை அளவாக சாப்பிடலாம். ஆனால் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதனை தொடவே கூடாது.

பாஸ்தாவில் க்ளுட்டன் அதிக அளவில் உள்ளது. ஆகவே க்ளுட்டன் சகிப்புத்தன்மையின்மை உள்ளவர்கள், இதனை தொடவே கூடாது. குறிப்பாக கர்ப்ப காலத்தில் சாப்பிடக்கூடாது. பாஸ்தா மிகவும் பிடிக்குமானால், இதனை கர்ப்ப காலத்தில் அளவாக சாப்பிடுங்கள். இல்லாவிட்டால், உடல் எடையானது அதிகரித்து, பின் கடுமையான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

பாஸ்தா சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவுடன், இன்சுலின் அளவும் அதிகரிக்க ஆரம்பித்துவிடும். எனவே கர்ப்ப காலத்தில் அளவாக சாப்பிடுங்கள். இதனால் பாஸ்தா சாப்பிடலாமா கூடாதா என்ற குழப்பம் வராது.

பாஸ்தாவில் இரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. எனவே நீரிழிவு உள்ளவர்கள், இதனை அறவே தவிர்க்க வேண்டும். இல்லாதவர்கள், இதனை மிகவும் அளவாக சாப்பிடுவது நல்லது.

பாஸ்தாவில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால், இது வயிற்றில் வாய்வு பிரச்சனையை உண்டாக்கி, வாந்தி மற்றும் குமட்டலை ஏற்படுத்தும். ஆகவே பாஸ்தாவை அளவாக எடுத்துக் கொள்வது நல்லது.

Loading...
Categories: Pregnancy Tips Tamil

Leave a Reply


Sponsors