குழந்தைகள் சொல் பேச்சுக் கேட்க வேண்டுமா,kulanthai valarpu tamil tips

உங்களுக்கு உண்மையிலேயே உங்கள் குழந்தையை நன்றாக வளர்க்க வேண்டும் என்ற நினைப்பு இருந்தால், நீங்கள் இப்போது இருக்கும் வழியை மாற்றிக்கொள்ள வேண்டும்.

குழந்தைகள் சொல் பேச்சுக் கேட்க வேண்டுமா?
சொல் பேச்சுக் கேளாமை கூட குழந்தைகளுக்கு அழகுதான்! இருந்தாலும், நீங்கள் சொல்லும்படி உங்கள் குழந்தைகள் கேட்க வேண்டும் என நினைத்தால், எதற்காக அப்படிச் சொல்கிறீர்கள் என்பதை அவர்களுக்குப் புரிய வையுங்கள். என் பெற்றோர் சொன்னாலுமே எதற்கு என்று தெரியாமல் நான் கூட எதுவும் செய்ததில்லை.

புரிய வைத்துவிட்டால், பிறகு அவர்களே செய்து விடுவார்கள். ஒரு சிலர் விதிவிலக்காக இருக்கலாம். அதைப் புரிய வைக்காமல் வெறுமனே நீங்கள் சொல்வதை அவர்கள் கேட்க வேண்டும் என நினைத்தால் இருவருக்குமே உயிர் போகும். திணிப்பதில் உங்கள் உயிர் போகும், ஏமாற்றுவதில் அவர்கள் உயிர் போகும்.

குழந்தைகள் வெவ்வேறு விதங்களில் பிறக்கின்றனர். ஒவ்வொரு மனிதனும் ஒருவிதமான வாய்ப்புடன் பிறந்திருக்கிறான். அவனால் என்ன சாதிக்க முடியும் என்று உங்களுக்குத் தெரியாது. ஆனால் நமது தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், அரசியல்துறை, போன்ற அனைத்திலும் நாம் உற்பத்தி கெடுவை நிர்ணயித்துவிட்டதால், அதற்கேற்ற மனிதர்கள்தான் நமக்குத் தேவை.

%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%af%8d

அதனால் சில மனிதர்களை நாம் தகுதியில்லாதவர்கள் என்று நிராகரித்து விடுகிறோம். இப்படி குழந்தைகளை முத்திரை குத்துவது கொடூரமான குற்றம்.
பிழைப்புக்கான சில தந்திரங்களைத்தான் உங்களால் குழந்தைக்குக் கற்றுத் தர முடியும். உங்களையும் குழந்தையையும் ஒப்பிட்டுப் பார்த்து, யார் அதிக மகிழ்ச்சியுடன் இருப்பதற்குத் தகுதியானவர், நீங்களா அல்லது உங்கள் குழந்தையா என்று பாருங்கள்.

உங்களை விட அவன் அதிக மகிழ்ச்சியோடு இருந்தால், வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று ஆலோசனை சொல்வதற்கு யாருக்கு தகுதி அதிகம், உங்களுக்கா அல்லது அவனுக்கா? எனவே, ஒரு குழந்தை வரும்போது, அது கற்றுக் கொள்வதற்கான நேரம், கற்றுக் கொடுப்பதற்கான நேரம் அல்ல.

ஒரு குழந்தை, குழந்தையாகவே இருப்பது மிக முக்கியமானது. அவனை ஒரு இளைஞனாக்குவதற்கு எந்த அவசரமும் இல்லை, ஏனென்றால், அதை உங்களால் திரும்பப் பெற முடியாது. அவன் குழந்தையாக இருக்கும்போது, குழந்தையைப் போல நடந்து கொண்டால், அது அற்புதமானது. அவன் இளைஞனான பிறகும், குழந்தையைப் போல நடந்து கொண்டால், அது அற்பமானது, அது வளர்ச்சி குன்றிய ஒரு வாழ்க்கை. அதனால், ஒரு குழந்தை இளைஞனாவதற்கு எந்த அவசரமும் இல்லை.

Loading...
Categories: குழந்தை மருத்துவம்

Leave a Reply


Sponsors