சோயா-65,soya 65 recipe in tamil,65 recipe list in tamil

தேவையானவை:
சோயா சங்க்ஸ் (மீல் மேக்கர்) – 50 கிராம் (25 பெரிய பீஸ்)
கார்ன்ஃப்ளார் – 2 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி-பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்
தயிர் – 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – 2 இலைகள்
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

 

%e0%ae%9a%e0%af%8b%e0%ae%af%e0%ae%be-65soya-65-recipe-in-tamil65-recipe-list-in-tamil

செய்முறை:
சோயா சங்க்ஸை கொதிக்கும் வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைத்துப் பிழிந்தெடுத்து வைத்துக்கொள்ளவும். பெரியதாக இருந்தால், இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். தேவையானவற்றில் எண்ணெய், சோயா சங்க்ஸ், கறிவேப்பிலை தவிர மற்ற பொருட்களை எல்லாம் ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவும். இதில் சோயா சங்க்ஸை சேர்த்துக் கிளறி அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊற விடவும். பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, இதில் சோயா சங்க்ஸை போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். அதே எண்ணெயில் கறிவேப்பிலையைப் பொரித்தெடுக்கவும். பொரித்த சோயா-65 மேல் கறிவேப்பிலையைத் தூவி தக்காளி சாஸுடன் பரிமாறவும்

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors