வாட்டிய முட்டை சாண்ட்விச்சும் ப்ரெஷ்ஷான புதினா சட்னி

தேவையான பொருட்கள்: புதினா இலைகள் – 2 கையளவு கொத்துமல்லி தழை – 1 கையளவு பச்சை மிளகாய் – 2 பூண்டு – 2 பற்கள் இஞ்சி – ½ இஞ்ச் பீஸ் லெமன் ஜூஸ் – 1 டீ ஸ்பூன் சர்க்கரை – 1 டீ ஸ்பூன் உப்பு – சுவைக்கேற்ப தண்ணீர் – ½ கப் வாட்டிய முட்டை சாண்ட்விச் செய்ய… ரொட்டி துண்டுகள் – 3 பாலாடைக்கட்டி (சீஸ்) துண்டுகள் – 2 புதினா சட்னி – 1 டேபிள் ஸ்பூன் முட்டை – 4 உப்பு – சுவைக்கேற்ப மிளகு – சுவைக்கேற்ப

செய்முறை: ப்ரெஷ்ஷான புதினா சட்னி செய்ய: 1 உங்களுடைய மிக்ஷர் க்ரைண்டரில் இருந்து சட்னி ஜாடியை எடுத்துகொள்ளுங்கள். அப்படி இல்லையென்றால்…ப்ளென்டரை (Blender) கொண்டும் புதினா சட்னியை நாம் தயாரிக்கலாம். 2 அதன்பின்னர், புதினா சட்னிக்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஜாடியில் சேர்க்க வேண்டும். 3 அவை அனைத்தையும் மென்மையான பேஸ்டாக வரும்வரை அரைத்துகொள்ள (அ) கலந்துகொள்ள வேண்டும். 4 ஒருவேளை, சட்னி மீதமிருந்தால், அதனை சேமித்து மற்ற சிற்றுண்டிகளுக்கு பரிமாறி மகிழலாம். 5 அந்த சட்னியை இரண்டு நாட்களுக்கு கூட நாம் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்து பயன்படுத்தலாம். வாட்டிய முட்டை சாண்ட்விச் செய்வது எப்படி: 1 ஒரு பௌலை எடுத்துகொண்டு, அதில் முட்டையை உடைத்து ஊற்றிகொள்ளுங்கள். அத்துடன் உப்பு மற்றும் மிளகை சேர்த்து கொள்ளுங்கள். அனைத்தையும் நன்றாக கலக்கி பஞ்சு போன்ற மென்மையானதாக முட்டை கலவையை மாற்றிகொள்ளுங்கள். 2 இப்பொழுது பொறிப்பதற்கான கடாயை எடுத்துகொள்ளுங்கள். அதன்பிறகு, முழு கரண்டியை கொண்டு அந்த முட்டை கலவையை எடுத்து கடாயில் போட வேண்டும். 3 கடாயை சாய்த்து, முட்டை எல்லா இடங்களிலும்…

%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a

கடாயில் பரவுமாறு செய்ய வேண்டும். 4 முட்டையானது அடிப்பாகத்தில் சமைக்கபட வேண்டியது அவசியம். அவ்வாறு சமைத்த பின்னர், ஆம்லெட்டின் மேலே ரொட்டி துண்டினை வைக்க வேண்டும். 5 அந்த ஆம்லெட்டின் பக்கங்களை மடித்து, அந்த ரொட்டி துண்டினை கொண்டு எல்லா பக்கங்களிலும் மூட வேண்டும். 6 மேலும் இரண்டு நிமிடங்களுக்கு சமைத்து, அந்த ரொட்டியை ஒரு தட்டில் எடுத்து வைக்க வேண்டும். 7 பாலாடைக்கட்டி துண்டினை ரொட்டிமீது வைக்க வேண்டும். மடிப்புகள் கொண்ட பக்கத்தில் அதனை வைக்க வேண்டும் என்பதனை நினைவில் கொள்ளுங்கள். 8 அதன்பிறகு, மற்ற இரண்டு ரொட்டி துண்டுகளையும் எடுத்துகொள்ள வேண்டும். 9 அந்த க்ரீன் சட்னியை, ஸ்பூனால் எடுத்து ரொட்டி முழுவதும் தடவிகொள்ள வேண்டும். 10 இந்த ரொட்டி துண்டை, முட்டை ஆம்லெட் உள்ள சாண்ட்விச்சுக்கு பயன்படுத்திகொள்ளலாம்.

11 அந்த மூன்று துண்டுகளையும் வாட்டி கொள்ள வேண்டும். 12 அதனை முக்கோண வடிவத்தில் நறுக்கி, கெட்ச் அப்புடனோ அல்லது புதினா சட்னியுடனோ பரிமாறி மகிழுங்கள். 13 ரொட்டியை வாட்டுவதற்கு, சாண்ட்விச் மேக்கரை (Sandwich Maker) நாம் உபயோகிக்கலாம். அதோடு மற்றுமொரு பரப்பில், காய்கறிகளான தக்காளி, வெள்ளரி, வெங்காயம், கேரட் ஆகியவற்றையும் சாண்ட்விச்சுடன் சேர்க்கலாம். இதனால், உங்களுடைய சாண்ட்விச்சானது ருசியாகவும், ஆரோக்கியமாகவும், முழுமையான ஊட்ட சத்துக்களுடனும் கிடைக்கிறது.

Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors