அல்சர் பிரச்சனையா இதை மட்டும் சாப்பிட வேண்டாம்,ulcer disease treatment in tamil

உணவுக்குழாய், இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்சுவரில் உருவாகும் ஒருவகைப் புண்கள் தான் அல்சராகும்.

அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த வகை உணவுகளைச் சாப்பிடலாம், எவற்றைச் சாப்பிடக் கூடாது என்பதை கட்டாயம் தெரிந்துக் கொண்டு அதை பின்பற்றுவதே சிறந்தது.

ஆல்கஹால்

தொடர்ந்து மதுப்பழக்கம் இருந்தால், அவர்களுக்கு பலவகை நோய்களுடன் அல்சர் பிரச்சனைகளும் ஏற்படும். அதிலும் அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் மது குடிக்கும் பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் அது அல்சரை பெரிதாக்கிவிடும்.%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%be-%e0%ae%87%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%ae%9f

காரமான உணவுகள்

காரமான உணவுகள் மற்றும் அதிக மசாலா பொருட்கள் கலந்த உணவுகள் வயிற்றில் அமிலத்தின் அளவை அதிகரிக்கச் செய்யும். எனவே அல்சர் இருப்பவர்கள் மிளகாய்த்தூள், மிளகாய் சேர்த்த காரமான உணவுகளை சாப்பிடக் கூடாது.

காபி

தொடர்ந்து காபியை அதிகமாக குடிப்பதால், பெப்டிக் அல்சர் ஏற்படும் என்று மருத்துவம் கூறுகிறது. எனவே தினமும் காபிக்குப் பதிலாக, வயிற்றுக்கு இதமான இயற்கை பானங்களை குடிப்பது நல்லது.

சிவப்பு இறைச்சி

சிவப்பு இறைச்சி சாப்பிடுவதால், அது வயிற்றின் ஓரங்களைப் பழுதடையச் செய்து, ஏனெனில் அதில் உள்ள புரதச்சத்து மற்றும் கொழுப்புச்சத்துக்கள் செரிமானம் அடைவதை தாமதமாக்கி, வயிற்றில் அமிலத்தை அதிகம் சுரக்கச் செய்து, அல்சரை அதிகமாக்கிவிடும்.

சோடா

சோடா மற்றும் குளிர்பானங்களை அதிகமாக அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் குடிக்கவே கூடாது. ஏனெனில் அதில் உள்ள சிட்ரிக் அமிலம், வயிற்றின் அமிலத் தன்மையை அதிகரித்து, செரிமானப் பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.

பால்

அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் பால் மற்றும் பால் மூலம் தயாரித்த உணவுப் பொருட்களை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் பாலில் உள்ள புரதம் மற்றும் கொழுப்புச்சத்து அமிலத் தன்மையை அதிகரித்து, வயிற்றுப் புண்ணை அதிகரிக்கச் செய்துவிடும்.

அல்சர் உள்ளவர்கள் எந்த உணவுகளை சாப்பிட வேண்டும்?

அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம்.
தினமும் நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள், தானியங்கள் ஆகியவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும் இதனால் செரிமானம் சீராக இருக்கும்.
முட்டை, தயிர், மீன், பீன்ஸ் ஆகிய உணவுகள் அல்சர் பிரச்சனையில் இருந்து விரைவில் குணமாக்கும்.
புதினா, தேங்காய்ப்பால், மணத்தக்காளிக்கீரை போன்ற உணவுகளை அல்சர் பிரச்சனைக்கு நல்ல நிவாரணம் தரக்கூடியவை.

Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil

Leave a Reply


Sponsors