கறி மிளகாய்,kari milagai,kari milagai samayal

கறி மிளகாய்

கப்சிக்கம் அன்னும்

Capsicum annum

குடும்பம் – சொலனேசியே

100ப கறிமிளகாயில் அடங்கியுள்ள போசணைப் பதார்த்தங்கள்
சக்தி 291
காபோஹைட்ரேட் 33 %
புரதம் 15 g
கொழுப்பு 11 g
கல்சியம் 150 mg
இரும்பு 9 mg
விட்டமின் 300 g
கரோட்டின் 600 g
தயமின் 300 g
ரைபோபிலேவின் 12 g

 

காலநிலை

இலங்கையில் எல்லா காலநிலை வலயங்களிலும் இதனைச் சிறப்பாகப் பயிரிடலாம். கடல் மட்டத்திலிருந்து 1500 மீற்றர் வரையுள்ள பிரதேசத்தில் வருடம் முழுவதும் செய்கை பண்ணலாம். சிறுபோகத்தில் செய்கை பண்ணும் போது மேலதிகமான நீர்ப்பாசனம் வழங்க வேண்டும்.

மண்

கறி மிளகாயிற்கு நீர் நன்கு வடிந்து செல்லக் கூடிய, ஆழமான  இருவாட்டி மண் அவசியமானதாகும். போதியளவான சேதனப் பசளைகளை இடுவதன் மூலம் மணல் போன்ற மண்கொண்ட தோட்டங்களிலும் சிறப்பான விளைச்சலைப் பெறலாம். மண்ணின் பீ.எச். 5.5 – 6.8 வரை இருப்பது அவசியமாகும்.

நிலத்தைப் பண்படுத்தல்

15 – 20 ச.மீ ஆழம் வரை நிலத்தைப் பண்படுத்தி மண்ணைத் தூர்வையாக்கி பாத்திகளை ஆயத்தம் செய்ய வேண்டும். மேலதிகமான நீர் வடிந்தோடுவதற்கு வசதியாக காண்களையும் அமைக்க வேண்டும்.

சிபாரிசு செய்யப்பட்ட வர்க்கங்கள்

ஹங்கேரியன் யெலோ வெக்‌ஸ் (HYW)

இளம் மஞ்சள் நிறமான காய், மினுங்கும் தன்மை கொண்ட அழுத்தமான மேற்பரப்பைக் கொண்டது. சாதாரணமாக 15 -20 சதுர மீற்றர் நீளமானதாய் இருக்கும். இவ்வர்க்கம் மலைநாட்டின் ஈரவலயத்திற்தகு உகந்தது. ஆனால் பள்ளநாட்டு, மத்திய நாட்டின் ஈர வலயத்தில் நடுகை செய்யும் போது பக்றீரியா வாடல் நோயால் அதிகளவில் பாதிக்கப்படும்.

சீ. ஏ. 8

இளம் பச்சை நிறமான காய்களில் சுருக்கங்கள் காணப்படும். மினுங்கும் தோலைக் கொண்டது. காயின் நுனிபகுதி தும்பிக்கையைப் போன்று உட்புறம் வளைந்து காணப்படும். இதுவும் 15 – 20 ச.மீ. நீளமாகக் காணப்படும்.

லங்கா யெலோ வெக்ஸ்

குட்டையான பயிர் காய்கள் மஞ்சள் நிறமானது. மேல் நோக்கியது. பக்றீரியா வாடலுக்கு எதிர்ப்பைக் கொண்டது.

தேவையான விதை

சீ. ஏ. 8 – ஹெக்டயரொன்றிற்க்கு 1000 கி.

H.Y.M  ஹெக்டயரொன்றிற்க்கு 1750 கி.

நாற்றுக்களை நடவேண்டிய பருவம்

காலபோகம் – நவம்பர் – டிசம்பர்

சிறுபோகம் – ஏப்ரல் – மே

நாற்றுமேடைகளை ஆயத்தம் செய்தல்

நாற்றுமேடைக்கு நீர் நன்கு வடிந்த செல்கின்ற, நிழலில்லாத இடத்தைக் தெரிவு செய்யவும். நாற்றுக்களைத் தோட்டத்தில் நடுவதற்கு 1 மாதத்திற்கு முன்னர் விதைகளை நடுவதற்கு இருத்தல் வேண்டும்.

ஒரு சதுர மீற்றர் விஸ்தீரணமான பாத்தியொன்றிற்கு நன்கு உக்கிய சேதனப் பசளையில் 3 – 4 கி.கி வரை இடல் வேண்டும்.

நாற்றுமேடையில் நாற்றுக்களுக்கு ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்காக விதைக்க முன்னர் பாத்திகளைத் தொற்று நீக்கம் செய்யவும். இதற்கு பாத்திகளின் மீது உமி, வைக்கோல் என்பனவற்றைக் தட்டுகளாக இட்டு தீ மூட்டவும். இதனால் நோயை உண்டாக்கும் நுண்ணுயர்களும், களை வகைகளும் அழிந்து விடும். அல்லது ஔபுக விடக் கூடிய நிறமற்ற தடித்த பொலுத்தீனால் நாற்றுமேடைப் பாத்திகளை 2 வார காலம் வரை மூடி வைத்தல் வேண்டும். இதனால் சூரிய வெப்பத்தின் மூலம் மண் சூடேறி தொற்று நீக்கம் செய்யப்படும். கப்ரான், திராம், போன்ற பங்கசு நாசினிகளில் ஒன்றை விசிறுவதன் மூலம்  நோயைக் கட்டுபடுத்த முடியும். இதைத் தவிர அடியழுகல், அந்திரக்நோசு போன்ற நோய்களைத் தடுப்பதற்கு, நாற்றுமேடையில் விதைப்பதற்கு முன்னர் கப்ரான் அல்லது திராம் போன்ற பங்கசு நாசினிகளைப் பயன்படுத்தி விதைகளைப் பரிகரிக்கவும்

தயாரிக்கப்பட்ட பாத்திகளில் களைக் கட்டுப்பாடு, பசளையிடல் போன்ற நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்வதற்கு வசதியாக வரிசைகளுக்குடையே 10 – 15  ச.மீ இடைவெளியில், 01 ச.மீ ஆழத்தில் விதைகளை இட்டு மெல்லிய மண் படையால் மூடவும். சுத்தமான வைக்கோல் போன்றவற்றைப் பயன்படுத்தி பத்திரக் கலவை இடவும்.

விதைகளை நட்டு 05 – 06 நாட்களில் பத்திரக்கலவையை அகற்றவும். விதைத்து 8 – 10 நாட்களில் விதைகளும் முளைத்து விடும். இளம் நாற்றுக்களைக் கடும் மழையிலுருந்தும், சூரிய வெளிச்சத்திலிருந்தும் பாதுகாப்பதற்கு ஒளிபுகவிடாத பொலித்தீன் அல்லது தென்னோவைகளைப் பயன்படுத்தி பந்தலிடவும்.

தோட்டங்களில் நட முன்னர் நாற்றுக்களை வன்மைப்படுத்த வேண்டும். இதற்கு தோட்டத்தில் நடுவதற்கு 10 நாட்களுக்கு முன் நாற்றுக்களுக்கு நீரூற்றும் இடை வெளியை  அதிகரிப்பதோடு, பந்தலையும் அகற்றவும்.

நடுகை இடைவெளி

21 நாள் வயதுடைய நாற்றக்கள தோட்டத்தில் நடுவதற்கு உகந்தவை ஆகும்.

H.Y.M  30 ச.மீ x 30 ச.மீ

C.A  8.40 ச.மீ x 40 ச.மீ

பசளை இடல்

யுறியா

கி.கி / ஹெ

முச்சுப்பர் பொசுபேற்று

கி.கி / ஹெ

மியுறியேற்றுப்

பொட்டாசு கி.கி / ஹெ

அடிக்கட்டுப் பசளை 100 220 65
4 வது வாராம் 100 65
8 வது வாராம் 100 65

 

 

நீர்ப்பாசனம்

ஆரம்பத்தில் 4 – 5 நாட்களுக்கொரு தடவையும், அதன் பின்னர் வாரத்திற்கொரு தடவையும் நீர்ப்பாசம் செய்தால் போதுமானதாகும். ஆனால் மழை வீழ்ச்சிக்கு நீர்ப்பாசன இடை வெளியை மாற்றலாம்.

பசளை இட்ட பின்னர் அவசியம்  நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். பூக்கள் உருவாகும் போதும் காய்கள் உருவாகும் போதும் நீர்ப் பற்றாக்குறை ஏற்படுமாயின் காய்கள் உதிரலாம். எனவே இப்பருவத்தில் போதியளவு ஈரப்பதன் இருக்கத்தக்கவாறு நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.

களைகளைக் கட்டுப்படுத்தல்

நட்டு 2 வாரங்களின் பின்னர் தாவரத்தின் அடிக்கு மண்ணைச் சேர்த்து, வையால் களைகட்டவும் நட்டு 2 வது, 4 வது, 8 வது, வாரங்களில் களைகளை கட்டுப்படுத்தல் வேண்டும்.

இரசாயனங்களைப் பயன்படுத்துவ தாயின் நாற்றுக்களை நட்டு இரு நாட்களில் பின்னர் அலக்குளோர் 45% என்ற களை நாசினியில் 1.4 – 2.4 கி.கி ஹெக்டயருக்கு விசிறலாம்.

நோய்க் கட்டுப்பாடு

நாற்றழுகல்

நாற்றுக்களின் அடி வேர் என்பன கறுப்பு நிறமாகி அழுகி இறக்கும்

கட்டுப்பாடு

பங்கசு நாசினிகளை விசிறல் நாற்றுமேடையை நன்கு பராமரித்தல், நீர் வடிந்து செல்வதை அதிகரித்தல். விதைப் பரிகாரம், சிபாரிசு செய்யப்பட்ட அளவில் விதைப் பாவனை, பாதிக்கப்பட்ட பயிர்களை அகற்றவும்.

அந்திரக்நோசு நோய்

நோய் அறிகுறிகள்

காய்களில் கபில நிறமான தாழ்ந்த புள்ளிகள் ஏற்படும். பழங்கள். பூ அரும்புகள், கிளைகள் என்பன நிறம் மாறும். நோயி தாவரம் முழுவதும் பரவுவதால் தாவரம் இறக்கும்.

கட்டுப்பாடு

நோயால் பாதிக்கப்பட்ட  தாவரங்களையும், காய்களையும் தோட்டத்தில் இருந்து பிடுங்கி அகற்றி  பங்கசு நாசினியை விசிறுங்கள் (டெகொனில்) வயற்  சுகாதாரம், ஆரோக்கியமான விதை, பயிர் மீதிகளை அழித்தல், பயிர் சுழற்சி என்பன இதனை கட்டுப்படுத்த உதவும்

வாடல் நோய்

நோய் அறிகுறிகள்

சடுதியாக தாவரங்கள் வாடும், தாவர அடிப்பகுதியும் வேர்களும் அழுகும் நோய் எதிர்ப்புப் பயிர்களை பயிரிடல், பயிர் சுகாதாரம், களை கட்டுப்பாடு பயிர் சுழற்சி, நீர் வடிந்து செல்வதை  ஊக்குவித்தல் என்பனற்றின் மூலம் இதனைத் தவிர்க்கலாம்.

இலைச்சுருளல்

வெண் ஈ, அழுக்கணவன், சிற்றுண்ணுகள் என்பனவற்றால் இந்நோய் பரவுவதால் அவற்றை உகந்த பூச்சிநாசினியை விசிற கட்டுப்படுத்தலாம். களை கட்டுப்பாடும் பயிர் மீதிகளை அகற்றலும் இதனைக கட்டுப்படுத்த உதவும்.

இலைப்புள்ளி

அந்திரக்நோசு நோயைப் போன்று இதனைக கட்டுப்படுத்தலாம்,

மஞ்சல் நிற புள்ளிகள் பின்னர் கபில நிறமாக மாறும், பாதிக்கப்பட்ட பயிர்களை அகற்றல், சிபாரிசுசெய்யப்பட்ட இடை வெளியை பின்பற்றல். பயிர் சுழற்சி என்பன இதனைக் கட்டுப்படுத்த உதவும்.

தூள் பூஞ்சண நோய்

7 தொடக்கம் 14 நாட்களுக்கொரு தடவை பங்கசு  நாசினிகளை விசிறவும்.

பீடைகள்

வெண் ஈ

தாவர சாற்றை உறிஞ்சிக் குடிக்கும், இதனால் சுரக்கப்படும் வெல்லம் பங்கசுவின் தாக்கத்தை அதிகரிக்கும். இலை சிருளும், இலை மஞ்சலாகும். வைரஸ் நோயைக காவும் குறித்த நேரத்தில் பயிரிடல், பயிர் சுழற்சி, பயிர் மீதிகளை அகற்றல், உயிரியல் கட்டுப்பாடு, விதைப் பரிகாரம். மஞ்சல் நிற ஒட்டமை பொறிகள், பயிர்ச் சுகாதாரம் என்பன இதனைக் கட்டுப்படுத்த உதவும்.

அழுக்கணவான்

மஞ்சல் நிற சுருண்ட இலைகள் இதன் வெல்லச் சுரப்பு சில மொல்ட பங்கசுவின் வளர்ச்சியைத்  தூண்டும். சில தாவரத்தினுல் நச்சுப்  பொருளை உட் செலுத்தும் வைரசு நோயைக் காவும்.

இயற்கை  எதிரிகள் கையால் அகற்றல் சுருண்ட இலைகளைக் கத்தரித்தல், அதிக  நைதரசன் பாவனையை குறைத்தல் அதிகளவு நீர்ப்பாய்ச்சி பூச்சியை அகற்றல் இதனைக் கட்டுப்படுத்த உதவும்.

பனிப்பூச்சி

இதனால் பாதிக்கப்பட்ட இலை கபில நிறமாக மாறி உலரும் போதிய நீர்ப்பாசனமும், மூடுபடையிடலும் உயிரியல் கட்டுப்பாடு இரசாயன கட்டுப்பாடு என்பன இதனைக கட்டுப்படுத்த உதவும்.

சிற்றிண்ணிகள்

இலையிலிருந்து தாவரச்  சாற்றை உறிஞ்சிக் குடிக்கும் ஆரம்பத்தில் மென் புள்ளிகள் இலையில் உருவாகும். பின்னர் இலை மஞ்சலாகி விழும். விளைவும் பாதிக்கப்படும். உயிரியல் முறையிலும் சல்பர் இரசாயனங்களை விசிறியும். இதனைக் கட்டுப்பத்தலாம்.

அறுவடை

அறுவடை நட்டு 75 நாட்களில் முதலாவது தடவை பங்கசு நாசினிகளை விசிறவும்.

அறுவடை செய்தல்

காய்களின் மீது பனி இல்லாத வரட்சியான நாளில் அறுவடை செய்யலாம். மழை நாட்களில் அறுவடை செய்வதை இயலுமான வரை தவிர்த்துக் கொள்ளவும்.

அறுவடை செய்த பின்

அறுவடை செய்தவுடன் இயலுமான வரை விரைவாக சந்தைக்குக் கொண்டு செல்ல  வேண்டும். இதற்கு  சிறந்த காற்றோட்டம் ஏற்படக்கூடியவாறு துளைகள் கொண்ட பை, அல்லது பிளாஸ்டிக் பெட்டிகளைப் பயன்படுத்தலாம். கொண்டு செல்ல முன் கனிவதற்கு ஆயத்தமான நிலையில் உள்ள பழங்கள் வேறாக்கவும். இதனால் பழங்கள் கனிவதைத் தவிர்த்துக் கொள்ள முடியும். குளிரூட்டிய களஞ்சியங்களில் சேமித்து வைப்பதனால் திருப்திகரமாக நீண்ட காலம் சேமிக்கலாம்.

விளைச்சல்

ஹங்கேரியன் யெலோ வெக்ஸ்

3 – 4 தடவைகள்  அறுவடை செய்யலாம்

10 – 15 மெ.தொன் / ஹெ

சீ.ஏ – 08

ஈரவலயம் 8 – 10 தடவைகள் அறுவடை செய்யலாம்  6 – 8 மெ.தொன் / ஹெ

உலர் வலயம் 8 – 12 தடவைகள்  அறுவடை செய்யலாம்  10 – 15 மெ.தொன் / ஹெ

Loading...
Categories: Vivasayam | விவசாயம்

Leave a Reply


Sponsors