பீன்ஸ் கறி,beans curry,beans curry samayal kurippu in tamil

பீன்ஸ் – அரை கிலோ,
பாசிப்பருப்பு – கால் கப்,
தேங்காய் துருவல் -அரை கப்,
உப்பு – தேவைக்கேற்ப,
தண்ணீர் – ஒரு கப்.
தாளிக்க: 
கடுகு – 1 டீஸ்பூன்,
உளுந்து – 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 4,
கறிவேப்பிலை – சிறிது,
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்.

பீன்ஸை பொடியாக வெட்டவும். அத்துடன் பாசிப்பருப்பைச் சேர்த்து, உப்பு போட்டு, 1 கப் தண்ணீர் விட்டு, குக்கரில் 1 விசில் வரும்வரை வைக்கவும். 2 நிமிடங்கள் கழித்து, பிரஷரை ரிலீஸ் செய்து, வடிகட்டவும். (பீன்ஸும் பருப்பும் வெந்த தண்ணீரை வீணாக்காமல், குழம்பு அல்லது ரசத்தில் சேர்க்கலாம்). பீன்ஸ், பருப்புக் கலவையை ஒரு தட்டில் பரத்தி வைக்கவும்.

எண்ணெய் காய வைத்து, தாளிக்க வேண்டிய பொருள்களைச் சேர்த்துப் பொரிந்ததும், அதை பீன்ஸ் கலவையின் மேல் கொட்டி, தேங்காய் துருவலையும் சேர்த்துக் கலக்கவும். தாளிதப் பொருள்களுடன் பீன்ஸை சேர்த்து, அடுப்பில் வைத்து  கிளறக் கூடாது. இந்த முறையில் செய்தால் பீன்ஸ் நிறம் மாறாமல் பசுமையாக இருக்கும்.

Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors